நிலவில் பன்னாட்டு விண்வெளி நிலையம் அமைப்பது அவசியம் சந்திராயன் 3 திட்ட இயக்குநர் வீர முத்துவேல் கூற்று

2 Min Read

அரசியல்

கோவை, அக். 30-  நிலவில் பன் னாட்டு விண்வெளி நிலையம் அமைக்க வேண்டும் என்று ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குநர் வீர முத்துவேல் கூறினார். கோவையில் நேற்று முன்தினம் (28.10.2023) தனியார் பள்ளி மாணவ, மாணவி களுடன் கலந்துரையாடிய வீர முத்துவேல், பின்னர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

‘சந்திரயான் 3’ திட்டத்தின் ஆயுட்காலம் நிறைவடைந்து விட் டது. சூரியஒளி ஆற்றலைக் கொண்டு மட்டுமே செயல்படும் என்பதால், 14 நாட்களுக்கு மட்டுமே செயல்படும் வகையில் விண்கலம் வடிவமைக்கப் பட்டது.

வரும் ஆண்டுகளில் கடும் குளிர் நிலவும் சூழலிலும், உள்ளே இருக்கும் இயந்திரங்களை கதகதப் பாக வைத்துக்கொள்ளும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ‘சந்திரயான்-3′ திட்டம் நாட்டின் சாதனையாக மாறியுள்ளது. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ மற்றும் பல்வேறு நாடுகளின் விண் வெளி ஆராய்ச்சி நிறுவனங்க ளுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது. நிலவில் பன் னாட்டு விண்வெளி நிலையம் அமைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அதைக் கருத்தில் கொண்டுதான் நிலவுக்கு மனிதர் களை அனுப்பும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம். 

இதற்காக, தொடர்ந்து பல் வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள் ளப்படும். நிலவின் தென்துருவம் அருகே தரையிறங்கியப் பெரு மையை இந்தியா அடைந்துள்ளது.

சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய பகுதி அருகேதான், ரஷ் யாவின் விண்கலமும் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கெட்ட வாய்ப்பாக அவர்களின் திட்டம் தோல்வியடைந்துவிட்டது. 

தென்துருவத்தில் விண்கலத்தை தரையிறக்குவது எளிதல்ல. தொழில் நுட்ப ரீதியாக பல்வேறு பிரச் சினைகள் உள்ளன. இவற்றையெல் லாம்  சமாளித்து, தென்துருவத்துக்கு அருகே லேண்டரை தரையிறக்கி னோம். இதுவரை எந்த நாடும் இந்த சாதனையைப் புரியவில்லை.

வரும் ஆண்டுகளில், நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்து வருதல் உள்ளிட்ட நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். சந்திரயான்-3 திட்டத்தில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. 

வெப்ப நிலை உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்யப்பட் டுள்ளது. நிலவில் சல்பர் அதிகம் உள்ளது என்பன உள்ளிட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.

தற்போது இஸ்ரோவில் 20 திட்டங்கள் நடைமுறையில் உள் ளன. 

அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இஸ்ரோவில் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகி றோம். இவ்வாறு வீரமுத்துவேல் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *