முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர், காரைக்கால் மாவட்டம் நிரவி பகுதிக் கழக மேனாள் தலைவர் மறைவுற்ற சி.முத்தையனின் இணையரும், கழகத் தோழர் நாகப்பனின் தாயாரும், காவல் துறை உதவி ஆய்வாளர் நிரவி நா.மனோக ரனின் அத்தையாருமான மு.முனியம்மாள் இயற்கை எய்தினார். அவர் தம் குடும்பத்தி னருக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் வீர வணக்கத்தையும் காரைக்கால் மண்டல கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்பட்டது. இறுதி ஊர்வலம் இன்று (3-2-2023) மதியம் 2 மணியளவில் வாஞ்சூர் தோழர் நாகப்பன் இல்லத்திலிருந்து புறப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
—-
திருப்பூர் மாவட்ட கழக அமைப்பாளர் வீ.சிவசாமி (வயது 59) உடல் நலக் குறைவால் திருப்பூர் பூங்கா நகரில் இன்று (3-2-2023) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மாலையில் இறுதி ஊர்வலம் நடை பெற்றது. அவருக்கு வாழ்விணையர் மகேஸ்வரி, மகள்கள்: சூர்யா, அபிநயா ஆகியோர் உள்ளனர். தொடர்புக்கு: 9842268290
குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மறைவுற்ற வீ.சிவசாமியின் வாழ்விணையரிடம் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்து, ஆறுதல் கூறினார்.