திருச்சி, பிப். 3- இந்திய மருந்தியல் கூட்டமைப்பு (Indian Pharmaceutical Association) சார்பாக தேசிய அளவிலான பேச்சுப் போட்டி பல்வேறு மருந்தியல் கல்லூரிகளுக்கி டையே நடைபெற்றது.
இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவி எம்.மஞ்சுசிறீ கலந்து கொண்டு கல்லூரி அளவில் நடைபெற்ற போட்டியின் முதல் சுற்றில் தேர்வாகி மாநில சுற்றுக்கு தகுதி பெற்றார். பின்னர் டிசம்பர் 15ஆம் தேதி சேலம் விநாயகா மிஷன் பல்கலைகழகத்தின் மருந்தியல் துறையில் “Pharmacy United in Action for a Healthier World” என்ற தலைப்பில் நடைபெற்ற மாநில சுற்றில் இரண்டாம் இடத்தை பிடித்து நினைவுப்பரிசும் பாராட் டுச் சான்றிதழும் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து 07.01.2023 அன்று ஆதித்யா பெங்களுர் மருந்தியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ABIPER) நடைபெற்ற அரை இறுதிச் சுற்றில் 18 மாநிலங்களிலிருந்து 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் மாணவி எம். மஞ்சுசிறீ உட்பட 9 போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வாகினர். நிறைவுச் சுற்று 21.01.2023 அன்று நாக்பூரில் நடை பெற்றது.
இந்திய மருந்தாக்கவியல் கூட்டமைப்பின் சார் பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாணவி எம். மஞ்சுசிறீ கலந்து கொண்டு ரூ.5000- பரிசுத் தொகை, நாக்பூர் பயணத் திற்கான செலவுத் தொகை ரூ.2250 – மற்றும் மருந்தியல் தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான பணிவாய்ப்பையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்திய அளவில் நடை பெற்ற போட்டியில் பரிசு பெற்ற மாணவி எம். மஞ்சுசிறீக்கு நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.