திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேட்டி: ‘‘தமிழக கவர்னர் ரவி தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். அவர்கள் நம்பும் மனுதர்ம சாஸ்திரத்தில் 10 ஆவது அத்தியாயத்தில் ‘திராவிடம்’ என்ற வார்த்தை உள்ளது. இதைப் பலமுறை சொல்லிவிட்டோம். அரசியல்வாதிக்கு மேலாக சூப்பர் அரசியல்வாதியாக தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள கவர்னர் இவ்வாறு பேசுகிறார்!
‘தினமலர்’ விமர்சனம்: இனி புதுசா தனக்கு விளம்பரம் தேடி கவர்னர் என்ன தமிழகத்தில் தேர்தல் களத்திலா நிற்கப் போகிறார்?
– ‘தினமலர்’, 31.10.2023, பக்கம் 9
அப்படியா?
விளம்பர வியாதின்னு ஒண்ணு இருக்கு – அது இன்னொருவகைப் போதையும்கூட!
‘‘Speak ill of me or well of me.”
‘‘நல்லது பேசினாலும், அல்லது பேசினாலும் என்னையே பேசு!” என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி!
கவர்னர் தேர்தலில் நிற்கிறார் என்பதல்ல பிரச்சினை. அவர் சார்ந்த ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி.யின் பிரச்சார ஊதுகுழலாக இருக்
கிறார் என்பதுதான் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.