4.2.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பிபிசி ஆவணப்படம் தொடர்பாக மூன்று வாரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தாக்கீது பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தி டெலிகிராப்:
* குஜராத் 2002 வன்முறை குறித்த பிபிசியின் திரைப்படத்திற்கு மோடி அரசு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் 500 பேர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
* அதானி குழுமத்தில் முதலீடு செய்யுமாறு பிரதமரால் கட்டாயப்படுத்தப்பட்ட எல்அய்சி, எஸ்பிஅய் மற்றும் பிற நிறுவனங்களை சுதந்திரமான விசாரணை மட்டுமே காப்பாற்றும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் குறித்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதை மோடி அரசு தாமதப்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
– குடந்தை கருணா