தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும்
‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பொதுக்கூட்டத்தை
மாநாடு போல் மிகச் சிறப்பாக நடத்துவது என முடிவு
தஞ்சை, பிப். 4– தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப் புரை தொடர்பயண பொதுக் கூட்டத்தை அம்மாப்பேட்டை யில் மிக எழுச்சியாக நடத்துவது தஞ்சை மாவட்ட கலந்துரையா டல் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.
29.01.2023 ஞாயிறு அன்று காலை 10 மணி அளவில் சாலியமங்கலம் காந்திஜி சாலை சில்வர் மகால் அரங்கத்தில் தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்ட கழக தலை வர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையேற்று உரையாற்றி னார். தஞ்சை மண்டல கழக தலைவர் மு.அய்யனார் முன்னி லையேற்று உரையாற்றினார். திராவிடர் கழக பொதுச் செய லாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரையாற்றிய வர்கள்: தஞ்சை மாவட்ட செய லாளர் அ.அருணகிரி. மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் வெ.நாராயணசாமி, தஞ்சை மாவட்ட துணை செய லாளர் அ.உத்திராபதி, தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந் திரன், தஞ்சை மாநகர செயலா ளர் அ,டேவிட், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந் தூரப்பாண்டியன், அம்மா பேட்டை ஒன்றிய தலைவர் கி.ஜவகர், அம்மாபேட்டை ஒன் றிய அமைப்பாளர் சாமி.தமிழ்ச் செல்வன், அம்மாப்பேட்டை ஒன்றிய துணை தலைவர் சோ.உத்திராபதி, அம்மாபேட்டை ஒன்றிய துணை செயலாளர் வை.ராஜேந்திரன், உரத்தநாடு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், உரத்தநாடு ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம் மாவட்ட ப.க. துணைத் தலைவர் பெரியார் கண்ணன், சாலியமங்கலம் பிர சன்னா, வை.பன்னீர்செல்வம், விஜயகுமார், விநாயகம், சீனி வாசன், சக்தி மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம் 1:
பட்டுக்கோட்டை ஒன்றிய கழக அமைப்பாளர் வீரக்குறிச்சி ஆரோக்கியராஜ், பட்டுக் கோட்டை மாவட்ட துணை தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சி.சின்னக் கண்ணு ஆகியோரது மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்க லையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2:
சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் ஆட்சி விளக்க தொடர் பரப்புரை பயண பொதுக் கூட்டத்தை மார்ச் 4 அன்று அம் மாபேட்டையில் நடத்துவதற்கு அனுமதி அளித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்க ளுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 3:
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டத்தை மாநாடு போல் மிகச் சிறப்பாக நடத்துவது என முடிவு செய் யப்படுகிறது, மேலும் அம்மா பேட்டை வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் எழுச்சிமிகுந்த வர வேற்பு அளிப்பது எனவும் முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் 4:
04.03.2023 அன்று அம்மா பேட்டையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பொதுக் கூட்டத்தை விளக்கி தெருமுனை கூட்டங்கள் நடத்துவது எனவும், சுவரெழுத்து பிரச்சாரம் செய்வது எனவும் முடிவு செய்யப்படுகிறது.
புதிய பொறுப்பாளர்கள்
அம்மாபேட்டை ஒன்றிய கழக தலைவர் : கி. ஜவகர்
அம்மாபேட்டை ஒன்றிய கழக செயலாளர் : சவு. காத் தையன்
அம்மாபேட்டை ஒன்றிய கழக துணை தலைவர்: செ.உத்திராபதி
அம்மாபேட்டை ஒன்றிய கழக துணை செயலாளர் :வை.ராஜேந்திரன்
அம்மாபேட்டை ஒன்றிய கழக அமைப்பாளர் :சாமி.தமிழ்ச்செல்வன்
சாலியமங்கலம் கிளைக் கழக தலைவர் : துரை.அண்ணாதுரை
சாலியமங்கலம் கிளைக் கழக செயலாளர்: மா.சுடரொளி
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மு.ரவிச்சந்திரன்
ஒன்றிய மாணவர் கழகத் தலைவர்: தம்பி.பிரபாகரன்
ஒன்றிய மாணவர் கழகச் செயலாளர்: சி.பிரசன்னா
ஒன்றிய மாணவர் கழக அமைப்பாளர்:வி.நித்தியன்.