வல்லம், பிப். 4- இந்திய பாரா வாலிபால் சங்கம், தமிழ்நாடு பாரா கைப்பந்து சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலி பால் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தஞ்சா வூர் மாநகராட்சியுடன் இணைந்து அகில இந்திய அளவிலான மாற் றுத் திறனாளிகள் பங்கேற்கும் 11ஆவது அகில இந்திய பாரா வாலிபால் போட்டி பிப்ரவரி மாதம் 3, 4, 5 ஆகிய மூன்று நாட்கள் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் உள்விளையாட்டரங்கில் நடை பெறுகிறது.
இந்த போட்டியில் தமிழ் நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கருநாடகா, தெலங்கானா, ஆந் திரா, உத்ரகாண்ட், ஜார்கண்ட், பீகார், ராஜஸ்தான், ஒரிசா, மேற்குவங்கம், திரிபுரா உள் ளிட்ட 22 மாநிலங்களிலிருந்து 36 அணிகளைச் சார்ந்த சுமார் 450 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் போட்டியிலிருந்து வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய் யப்பட்டு உலக அளவில் நடை பெறும் பாரா ஒலிம்பிக் போட் டியில் கலந்துகொள்ள உள்ள னர்.
இந்தப் போட்டியின் துவக்க விழா 3.2.2023 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் இந்திய பாரா வாலிபால் சங்கத் தலைவர் சந் திரசேகர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் வீ.அன்புராஜ், பி.சி.அய் நிறுவன செயலாளர் மகாதேவ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் சங்கீதா, ஆகியோர் முன்னிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அர்ச்சுனா விருது பெற்ற பத்மசிறீ கிரிஸ், பத்மசிறீ தங்கவேல் மாரியப்பன், பத்மசிறீ சுக்வீர் சிங், பி.சி.அய் மேனாள் செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு பெருமை சேர்க்கின்றனர்
இப்போட்டியின் நிறைவு நாளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு அய்.ஓ.பி வெற்றிக் கோப்பையினையும் பரிசுத் தொகையினை யும் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் மக்கள் பிரதிநிதிகள், தேசிய, தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலிபால் சங்க நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
இப்போட்டிக்கான ஏற்பாடு களை தமிழ்நாடு பாரா வாலி பால் சங்க மாநில தலைவர் டாக்டர் மக்கள் ஜி. ராஜன் வழி காட்டுதலில் தமிழ்நாடு மேம் பாட்டு ஆணைய அலுவலர்கள், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் உடற்கல்வி இயக்குநர், தமிழ்நாடு பாரா வாலி சங்க பொதுச் செயலாளர் ராஜா தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலி பால் சங்க தலைவர் இராமநாத துளசி அய்ய வாண்டையார், பாரா வாலிபால் சங்க நிர் வாகிகள் செய்துள்ளனர்.
மேலும் அகில இந்திய அள விலான மாற்றுத்திறானாளிகள் பங்கேற்கும் 11 ஆவது அகில இந்திய பாரா வாலிபால் போட்டி இலச்சினையினை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழ்நாடு பாரா வாலி சங்க மாநில தலைவர் டாக்டர் மக்கள் ஜி.ராஜன், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் பதிவாளர் சிறீவித்யா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண் டல மேலாளர் .சங்கீதா, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தஞ்சாவூர் மாவட்ட தடகள தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாவட்ட விளையாட்டு அலுவ லர் டேவிட் டேனியல் ஆகி யோர் முன்னிலையில் வெளியிட்டார்.