ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு

Viduthalai
3 Min Read

அரசியல்

புதுடில்லி, அக்.31 மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ள ஆளுநர்மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பு ஏற்றார். அவர் பதவி ஏற்றது முதல் தமிழ்நாடு அரசுக்கும், அவ ருக்கும் இடையே இணக்கமான சூழல் ஏற்படவில்லை. இதனால் மோதல் போக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு அனுப்பும் கோப்பு களில் உடனுக்குடன் ஆளுநர் கையெழுத்து போடு வதில்லை. ஒவ்வொரு கோப்பு மீதும் பல்வேறு விளக்கங் களைப் பெற்று அதில் திருப்தி அடைந்தால்தான் ஆளுநர் கையெழுத்துப் போடுகிறார். மற்ற கோப்புகளை நிலுவையில் வைத்து அதை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி விடுகிறார்.

அவர் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், நான் ஒரு மசோதாவை நிறுத்தி வைத்து இருக்கிறேன் என்று சொன்னால் அது நிராகரிக்கப்பட்டதாகத் தான் அர்த்தம் என்று சொல்லி இருந்தார்.

வேறுவழியின்றி மசோதாவில் கையெழுத்திட்டு அனுப்பினார் ஆளுநர்!

தற்போது 25 சட்ட மசோதாக்களுக்கு அவர் கையெ ழுத்திடாமல் உள்ளார். ஏற்கெனவே நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது அதற்கு ஆளுநர் முதலில் ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டார். அதன்பிறகு 2 ஆவது முறையாக சட்டமன்றத்தில் அந்த மசோதாவை நிறைவேற்றி அனுப்பிய பிறகுதான், வேறுவழியின்றி அந்த மசோ தாவில் கையெழுத்திட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தார். 

ஆளுநர் மாளிகையில் 

நிலுவையில் உள்ள மசோதாக்கள்

இதேபோல், மாநில பல்கலைக் கழகங்கள் மற்றும் சென்னை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது தொடர் பான மசோதா, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா, மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் நகர வளர்ச்சி குழுமங்கள்உருவாக்குவது தொடர்பான தமிழ்நாடு நகர ஊரமைப்பு திட்ட மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் ஆளுநரின் கையெழுத்துக்காக நிலுவையில் உள்ளது.

இதுமட்டுமின்றி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா, தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பி னரை தேர்வு செய்வதை நிறுத்தி வைப்பதற்கான மசோதா, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி உறுப்பினரை தேர்வு செய்வதை தடுக்கும் சட்டத்தை திருத்துதல், தமிழ்நாடு அடுக்குமாடி குடி யிருப்பு உரிமையாளர் சட்டம் ஆகியவையும் நிலுவை யில் உள்ளன.

இந்த சட்ட மசோதா உள்பட 25 சட்ட மசோதாக் களுக்கு அதிகமான கோப்புகள் மீது ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத் துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போதிய விளக்கம் அளித்தும், நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் அதன் மீது முடிவெடுத்து கையெழுத்திடாமல் ஆளுநர் உள்ளதால் தமிழ்நாடு அரசு அவர் மீது அதிருப்தி அடைந்துள்ளது.

அதில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் 200 ஆவது பிரிவின்கீழ் ஒப் புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழி காட்டுதல்களை வகுக்க வேண்டும். ஆளுநர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும் என்று உத்தரவிடுமாறு தமிழ்நாடு அரசு இந்த மனுவில் வலியுறுத்தி உள்ளது. 

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை  (3.11.2023) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *