க.சுவாமிநாதன்
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர்
கூட்டமைப்பின் மேனாள் பொதுச் செயலாளர்
கிரிக்கெட் குறுகிய அரசியலுக்கு ஆளாக்கப் பட்டது போல அடுத்த காட்சி பொருளாதாரம் நோக்கி நகர்ந்துள்ளது.
எந்த ஒன்றும் அதன் எல்லைகளைக் கடந்து குறுகிய நோக்கங்களுக்கு பயன்படு த்தப்படும் போது அது அதீத அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மீதும் அந்த அழுத்தம் பிரதிபலித்திருக்கக் கூடும். இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியரின் விழைவாக இருப்பது இயல்பானது. அதே நேரத்தில் விளையாட்டு, வெற்றி தோல்விகளை உள்ளடக்கியது; திறமைகளை தேசம் கடந்தும் கொண்டாடக் கூடியது. ஆனால் குறுகிய அரசியல், உணர்ச்சியூட்டல்கள் இரு தரப்பு விளையாட்டு வீரர்கள் மத்தியிலும் அழுத்தத்தை உருவாக்கியதை உணர முடிந்தது.
கிரிக்கெட் கிளைமாக்ஸ் தாங்கள் விரும்பிய வகையில் அமையாததாலோ என்னவோ சங்பரிவாரங்களின் சமூக வலைத் தள படை தங்களின் ஆயுதங்களை பொருளாதாரம் நோக்கி திருப்பிவிட்டுள்ளது
ஒரு “லைவ் டிராக்கர் ஷாட்” இமேஜை வைத்துக் கொண்டு இந்தியா 4 டிரில்லியன் ஜி.டி.பி சாதனையை எட்டி விட்டது என்று களம் இறங்கி விட்டார்கள். ஆனால் இவ்வளவு பெரிய சாதனையை இந்திய நிதி அமைச்சகம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்திய புள்ளி விவர அமைப்பு வெளியிடவில்லை. இது குறித் தெல்லாம் சமூகவலைத்தள படை கவலைப்பட வில்லை. சூன்யத்தில் இருந்தே கோட்டை கட்டுபவர்கள் அவர்கள். ஒரு ஸ்கிரீன் ஷாட் கிடைத்தால் விடுவார்களா?
சமூக வலைத் தள படை என்றால் வழக்க மாக முகத்தை மறைத்துக் கொண்டு முக நூலில் வலம் வரும் ஆட்கள் மட்டுமல்ல. 2 ஒன்றிய அமைச்சர்கள், மகா ராட்டிரா துணை முதல மைச்சர் ஆகியோரும் இந்த 4 டிரில்லியன் கதையை கூட்டாக எழுதியவர் களில் அடக்கம். இவர்களைத் தவிர பட்டம் பறக்க விட்ட இன்னொரு முக்கியமான நபர் உண்டு. வேறு யார்? ஆட்சியாளர்களின் ஆத்ம நண்பர் கவுதம் அதானிதான். (ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் 19.11.2023).
உண்மை என்ன?
இதோ “பிசினஸ் இந்தியா” (20.11.2023) தரும் கணக்கு.
இந்தியப் பொருளாதாரம் 2024 இல் 3.6 டிரில்லியன் டாலரை தொடும் என்பதே இந்திய பட்ஜெட் மதிப்பீடு. தேசிய புள்ளி விவர அமைப்பு (National Statistical Organisation) ஜனவரி 2024 இல் தான் முன் மதிப் பீட்டை (Advance Estimates) வெளியிடப் போகிறது.
பேங்க் ஆப் பரோடா தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் கருத்தில் “4 டிரில்லியன் டாலர் ஜிடிபி என்பது தற்போ தைய நிலைமையில் சாத்தியம் இல்லை. 2024 – 2025 இல் சாத்தியம் ஆகலாம்”
ஆகவே சமூக வலைத் தள கொண்டாட்டம் உண்மைகளை அடிப்படையாக கொண்டதல்ல. இது பொய் என்று நிரூபணம் ஆன உடன் இன்னொரு பொய்யைத் தேடி நகர்ந்து விடுவார்கள்.
மேலும் ஜி.டி.பி வளர்ச்சி என்பது ஒட்டு மொத்த வளர்ச்சியின் குறியீடு அல்ல. தனி நபர் சராசரி ஜி.டி.பி என்ற அளவு கோலே ஓரளவு உண்மை நிலவரத்தை தரக் கூடியது. ஆனால் அதுவும் கூட முழு உண்மை அல்ல. காரணம் சராசரி என்பது டாப் பணக்காரர்கள் வருமானம் உயர்ந்தாலும் அதிகரித்து விடும். ஆகவே தனி நபர் சராசரி உயர்வு என்ப தும் வளர்ச்சி கீழ் மட்டம் வரை போயிருக்கிறது என்பதற்கான ஆதாரம் அல்ல. இருந்தாலும் உண்மையை நெருங்க அந்த விவரம் இங்கு உதவக் கூடும்.
ஜி.டி.பி.இல் இந்தியா உண்மையில் 5ஆவது ரேங்க் இல் உள்ளது. இந்த ஸ்கிரீன் ஷாட் படி 3ஆவது இடத்திற்கு வந்துவிட்டது. இந்த அஞ்சோ, மூன்றோ அது மக்களின் வாழ்க் கையைப் பிரதி பலிப்பது அல்ல.
இந்தியாவின் தனி நபர் சராசரி ஜி.டி.பி – படி உலக நாடுகளில் இந்தியாவின் ரேங்க் எவ்வளவு தெரியுமா? 139. எண்ணில் தவறு என்று நினைக்க வேண்டாம். எழுத்தில், நூற்றி முப்பத்து ஒன்பது. 5 எங்கே! 139 எங்கே!
தனிநபர் சராசரி ஜிடிபியில் இந்தியாவைவிட அதிக ரேங்க் பெற்றுள்ள நாடு கள் என்னென்ன? 132ஆவது இடத்தில் இலங்கை. 138ஆவது இடத்தில் பங்களா தேஷ் என்பதெல்லாம் கசந்தாலும் உண்மை.
139 என்ற ரேங்க் அய் காட்டிலும் மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ந்து கிடக்க வாய்ப்பு உள்ளது. காரணம் இந்தியாவில் அதீதமாக உள்ள செல்வக் குவிப்பு விகிதம்.
இவை எல்லாம் வைரல் ஆவதில்லை. காரணம் உண்மை பல நேரம் உணர்ச்சி ஊட்டக் கூடியதாக இருக்காது. அறிவார்ந்து ஆழமாகப் பேச வேண்டிய விசயங்கள் மக்களைச் சென்ற டைய நேரம் எடுக்கும்.
எல்லாவற்றையும்விட வேதனையானது, அதானி தனது 4 டிரில்லியன் டிவீட்டில் “ஜெய் ஹிந்த்” என்று முடித்து இருந்தார். தேச பக்தி இப் படிப்பட்ட பேர் வழிகளிடமும் சிக்கித் தவிக்கிறது. மீட்க வேண்டும்.