சென்னை பிப்.5 தேர்வுத்துறை இயக் குநர் சா.சேதுராம வர்மா, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்சில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தற்போது தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) வெளியிடப்பட்டது. அதில் மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை பிப்.10-க்குள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும். இதில், உரிய வழிமுறைகளை பின்பற்றி கூடுதல் கவனத்துடன் செய்து முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.