சென்னை, பிப்.5 அரசியல் பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் புதியதாக நியமிக்கப் பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந் துரையாடல் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பேசிய முதல் அமைச்சர் கூறியதாவது: புதியதாக பொறுப் பேற்றுள்ள மாவட்ட ஆட்சியாளர்கள் பொறுப்புடன் தங்கள் கடமையை ஆற்ற வேண்டும். என்னென்ன பணிகள் நடைபெறாமல் இருகிறது, என்னென்ன பணிகள் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து செயல்பட வேண்டும். மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். உங்களிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டு விட்டன என நாங்கள் அதனை கண்டுகொள்ளாமல் இருக்கப் போவ தில்லை. தலைமைச் செயலர் அவ்வப் போது சோதனை செய்வார். அதே போல, நானும் ஆய்வு செய்வேன். அரசியல் பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் சட்டம் ஒழுங்கை பேணி காக்க வேண்டும். புதிதாக பொறுப் பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும். என கூறினார்.