சென்னை, பிப்.5- சிறந்த இல்லங்களுக்கான புத்தாக்கமான தீர்வைகள் அடங்கிய முதலாவது அனுபவ மய்யத்தை ஹோகர் கன்ட்ரோல்ஸ் அண்ட் சூப்பர் சர்ஃபேசஸ் நிறுவனம் சென்னையில் திறந்துள்ளது.
எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் திறக்கப்பட்டுள்ள இந்த மய்யத்தில் வண்ணபூச்சுக்கள், நவீன சுவர்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. டிஜிட்டல் கதவு லாக்கர்கள் இங்கு உள் ளன. வயரிங் அல்லது மறு வடிவமைப்பு தேவையில்லாமல் ஏற்கனவே இருக்கும் எந்த சுவிட்ச் போர்டிலும் எளிதில் பொருந்தக் கூடிய முழு அளவிலான ரெட்ரோஃபிட் ஹோம் தீர்வுகளை இந்நிறுவனம் வழங்குகிறது. இத்தாலி மற்றும் உலகின் பிற பகுதிகளில் இருந்து கிடைக்கும் இயற்கையான சுண்ணாம்பு மூலம், பல்வேறு வடிவமைப்புகள் மற்றும் மேற்பரப்புகளில் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டர்களை நிறுவ னம் உருவாக்குகிறது என்று இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜஸ்பிரீத் சிங் பாட்டியா கூறினார். முன்னதாக இந்த மய்யத்தை அய்அய்அய்டியின் சென்னை மண்டலப் பிரிவின் தலைவர் ரவி மீனாட்சி சுந்தரம், செயலாளர் பிரனீதா வர்மா உள்ளிட்டோர் முன்னணி கட்டிடக் கலைஞர்கள் மற்றும் உள் அலங்கார வடி வமைப்பாளர்கள் முன்னிலையில் திறந்து வைத்தனர்.