சென்னை, பிப். 6- புதிய ஆரம்பப் பள்ளிகள் தொடக்கம் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான பரிந்துரைகளை அனுப்புவதற்கு தொடக்கக் கல்வித் துறை உத்தர விட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்டக் கல்வி அதி காரிகளுக்கு (தொடக்கக் கல்வி) அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழ் நாடு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகளின்படி தேவையின் அடிப்படையில் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப் பட வேண்டிய குடியிருப்புகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த வேண்டிய பள்ளி களை கண்டறிந்து அது சார்ந்த கருத்துருகளை புவியியல் வரைப் படத்துடன் அனுப்புமாறு ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வி இயக்குநர கத்தால் கோரப்பட்டுள்ளது.அதன்படி, புதிய தொடக்கப் பள்ளி மற்றும் தரம் உயர்த்தப்பட வேண்டிய ஆரம்பப் பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதிசார்ந்த விவரங் களை புவியியல் தகவல் முறைமை வரைப்படத்துடன் துரிதமாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும், அருகில் உள்ள பள்ளிகளின் விவரங்களையும் அதனுடன் இணைக்க வேண்டும்.நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட வேண்டிய பள்ளிக்கு அடிப்படை வசதிகளை உறுதிசெய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும். போதிய மாணவர் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பதை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதி காரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
அரசு தொடக்கப் பள்ளிகளைத் தரம் உயர்த்த திட்டம்: பரிந்துரைப் பட்டியல் அனுப்ப உத்தரவு
Leave a Comment