ஆர்.எஸ்.எஸ்., ஆதரவாளரான விக்டோரியா கவுரியை நீதிபதியாக பரிந்துரைத்ததை கண்டிக்கிறோம் – துரை வைகோ பேட்டி

1 Min Read
தமிழ்நாடு

சென்னை, பிப்.7- சிறுபான்மையருக்கு எதிராக மதவெறியைத் தூண்டும் வகையில் பேசும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரான வழக்குரைஞர் விக்டோரியா கவுரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருப்பதை கண்டிக்கிறோம் என ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று (6.2.2023) மாலை ம.தி.மு.க. தலைமைக் கழகம் தாயகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

சிறுபான்மையருக்கு எதிராக மதவெறியுடன் பேசுபவர் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரான விக்டோரியாக கவுரி. அவரை சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதியாக அறிவித் துள்ளது இந்திய ஒருமைப்பாட்டுக்கும், தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல, மக்களுக்கு சமநீதி கிடைக்காது  – ஏற்புடையதல்ல. வேதனையான செய்தி இது.

விக்டோரியா கவுரியின் கடந்த கால செயல்பாடுகள்தான் அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக அமர்த்தப்பட்டதற்கு காரணமாக இருக்கும்.  அரசியல் சார்ந்த நெருக்கடியால் இந்த நியமனம் நிகழ்த்தி இருக்கிறது என சந்தேகிக்கிறோம். இப்படி ஒரு நியமனம் நடப்பது இதுதான் முதல்முறை. இது தவறான முன் உதாரணம். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நியமனத்தை திரும்பப் பெற உச்சநீதிமன்றத்தை நாங்கள் வலியுறுத்துவோம். சட்ட ரீதியாகவும் மற்றும் ஆர்ப்பாட்டம்  – போராட்டங்களை நடத்துவோம்.

நீதிபதிகள் சந்துரு மற்றும் அரிபரந்தாமன் உள்ளிட்ட பொதுவுடைமை இயக்கத்தை சேர்ந்தோர் நீதிபதிகள் ஆன பின் அவர்களின் சொந்த சித்தாந்தத்தை பரப்பவில்லை.

கட்சியில் இருந்து விலகி 20 ஆண்டுகளுக்குப் பின்னரே அவர்கள் நீதிபதிகள் ஆனார்கள். விக்டோரியா கவுரி உயர்நீதிமன்ற நீபதிபதியாக அமர்த்தப்பட்டதன் மூலம் சமநீதி கிடைக்குமா? என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *