தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு காயிதேமில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது 31.1.2023 அன்று காயிதே மில்லத் கல்லூரியில் வழங்கப்பட் டுள்ளது. இதனாலும், பல விருதுகள் பெற்ற போதும் ஆசிரியர் அதனால் பெருமைப்படுவதில்லை. மாறாக மேலும் உழைக்க தன்னிடம் வேலை வாங் குவதற்கு என்றே கூறுவார். மேலும் தனக்குக் கிடைக் கும் விருதுகள் தனக்கானது அல்ல என்றும், தான் பெரியாரின் மாணவனானதால் அதன் பொருட்டு கிடைக்கும் விருது என்றும் மற்றும் இது எனது தோழர்களாகிய கருப்பு மெழுகுவத்திகளுக்கும் ஆனது என்றும் கூறுவார்.
அதன்னியில் தனக்கு வழங்கப்பட்ட 2.5 இலட் சமும் தன்வீட்டிற்குப் போகாது என்றும், பெரியார் உலகத்துக்கே செல்லும் என்றும் கூறியுள்ளதுஅவர் பெரியாரை தன் மூச்சுக் காற்றாகக் கொண்டு 80 ஆண்டுகளாக இயங்கி வருகிறார் என்பதைத்தான் காட்டுகிறது. தனக்குக் கிடைக்கும் எதுவும் தன் வீட் டுக்கோ, குடும்பத்திற்கோ செல்லாது என்பதையும் குறிப்பிட்டுள்ளது அவரது பொது வாழ்வு காலம் பூராவும் கிடைத்ததனைத்தும் பெரியார் திடலுக்குத் தான் சென்றது என்பது அனைவரும் அறிந்ததே! இதுமட்டுமா! விடுதலை ஆசிரியர் பொறுப்பேற்ற போதே ஊதியம் எதுவும் பெற மாட்டேன் என்று கூறியவராற்றே! இப்படி 80 ஆண்டு காலம் பொது வாழ்வில் ஈடுபட்டு நாள்தோறும் பெரியாரைப் பேசாத நாளெல்லாம் வீண் நாளே என்று சற்றும் ஓய்வு இன்றி சளைக்காமல் உழைக்கும், மிக எளிமையான ஒரு தலைவரைக் காண முடியுமா! இப்படிப்பட்ட பெருமை, புகழ் கழகத் தோழர் களுக்கும் தொண்டர்களுக்குத் தவிர மற்றவருக்கு உண்டா? விருது பெறும் போதோ, ஆசிரியரைப் புகழும்போதோ “எங்களை வசவால் வாழ்த்தியவர் களைக் கண்டுதான் பழக்கம், புகழும்போது சற்று நாணமாக இருக்கிறது” என்று தான் கூறுவார். சமூகநீதிக்காக, பெண் உரிமை முதலிய அய்யாவின் கொள்கைக்காக உழைக்கும் தன்னலமற்ற தனக்கு வமை இல்லாதத் தனித் தன்மை கொண்ட தலை வருக்கெல்லாம் தலைவராகத் திகழும் நம் இனத் தலைவரைக் காலம் கடந்தும் வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்.
– திருக்குறள் ச. சோமசுந்தரம்
தஞ்சாவூர்