ராமேசுவரம் அக்.31 இலங்கை கடற்படை கைது செய்த 64 தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடு விக்க வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஆயி ரத்துக்கும் மேற்பட்ட விசைப்பட குகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக நவ.3ஆம் தேதி மண்டபத்தில் ரயில்மறியல், 6ஆம் தேதி தங்கச்சிமடத்தில் உண்ணா நிலைப் போராட்டம் நடத்தவுள் ளதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக, இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களது படகுகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், மீனவர்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 13ஆம் தேதி பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்ற 27 தமிழ்நாட்டு மீனவர் களை இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களின் 5 படகு களையும் பறிமுதல் செய்தது. மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்டத்தை முடித்துக் கொண்டு, நேற்று முன்தினம் (29.10.2023) கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 37 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் அய்ந்து விசைப் படகுகளையும் பறிமுதல் செய் தனர்.
இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியங்களால் ராமேசுவரம் பகுதி மீனவ கிரா மங்களில் கொந்தளிப்பு ஏற்பட் டுள்ளது. இரண்டு வார காலத்தில் இலங்கை கடற்படையினர் கைது செய்த 64 தமிழ்நாட்டு மீனவர் களையும், இவர்களின் 10 படகுகளையும் விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று காலை முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால், ராமேசுவரத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். மீன் பிடிக்க செல்லாததால் ராமேஸ் வரம் துறைமுகத்தில் ஆயிரத்துக் கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ.3ஆம் தேதி மண் டபத்தில் ரயில் மறியல், நவ.6ம் தேதி தங்கச்சிமடத்தில் உண்ணா நிலைப் போராட்டம் நடத்த உள்ளோம்’’ என்றனர்.