காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டக் கூடிய மற்றும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் சில விஷயங் களை பேசினார் என்று, பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே மக்களவையில் உரிமை மீறல் தாக்கீது அளித்து உள்ளார். பிரதமர் மோடியால் அதானியின் விமானம் பயன்படுத்தப்பட்டது என யாராவது நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்றும் கூறினார்.
மிஸ்டர் துபே, இதோ பிரதமரான பிறகும் வடகிழக்கு மாநில தேர்தலின் போதும், மத்தியப் பிரதேச மாநில தேர்த லின்போதும் காலையில் போபால், பகலில் சில்லாங், மாலையில் கவுகாத்தி, இரவு டில்லி என்று அதானிக்குச் சொந்தமான சிறிய வகை சார்ட்டட் விமானத்திலும், குறுகிய தூரம் செல்லும் அதானிக்குச் சொந்தமான ஹெலிகாப்டரிலும் மோடி பறந்தார். இந்தப் படம் எல்லாம் நாளிதழ்களிலும் வந்ததுதானே! பாஜகவினரைப் போல் ‘போட்டோஷாப்’ செய்தது அல்ல!
சான்றுகள் வைத்தாகிவிட்டது – எப்போது பதவி விலகுவீர்கள்… அல்லது சாவர்க்கர் போல் இதற்கும் ஏதாவது பல்டி அடிப்பீரா?