சென்னை, அக். 31- சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவ லகத்தில் தமிழ்நாடு அர சுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்து றைக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள 32 சுருக் கெழுத்துத் தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று (30.10.2023) வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தி யாளர்களிடம் கூறியதா வது:
முதலமைச்சர் அரசுப் பணியாளர் தேர்வா ணையம் மூலம் பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 10,205 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சி யாக இந்து சமய அற நிலையத்துறையில் செயல் அலுவலர் (நிலை -1) 25 நபர்களும், 81 இள நிலை உதவியாளர்கள், 100 தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணை களை வழங்கியதை தொடர்ந்து இன்றைய தினம் 32 சுருக்கெழுத்துத் தட்டச்சர்கள், செயல் அலுவலர் (நிலை -4) நிலையிலான 2 நபர்கள் என மொத்தம் 240 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 539 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது.
இத்துறையில் கருணை அடிப்படையில் 24 பணியாளர்களுக்கும், கோயில்களில் பணிபுரிந்து பணியின் போது இறந்த 100 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கும் பணி நிய மன ஆணைகள் வழங்கப் பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் 110 -விதியின் கீழ் 5 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணியாற்றிய 1,278 நபர் கள் பணி நிரந்தரம் செய் யப்பட்டுள்ளனர்.
மேலும், காலியாக உள்ள 151 பணியிடங் களை நிரப்புவதற்கு அர சுப் பணியாளர் தேர் வாணையத்திடமிருந்து பட்டியல் எதிர் நோக் கப்பட்டுள்ளது. ஆகவே காலிப்பணியிடங்களை நிரப்புவதும், துறையி னுடைய அன்றாட பணி கள் எந்த வகையிலும் தடைபடாமல் இருப் பதற்கும் பல்வேறு முயற் சிகளை துறையின் சார்பில் எடுத்து வரு கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.