கள்ளக்குறிச்சி, பிப்..10 மூங்கில் துறைப் பட்டு அருகே உள்ள தொழுவந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முன் உள்ள கோவிலை அகற்றக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல் ஈடு பட்டனர்.
மூங்கில் துறைப்பட்டு அடுத்த தொழுவந்தாங்கல் கிராமத்தில் ஒரு வாரத்திற்கு முன் ஒன்றிய துவக்கப் பள்ளி எதிரே மாணவர்களுக்கான விளையாட்டு மைதானத்திற்காக ஒதுக் கப்பட்ட இடத்தில் அப்பகு தியில் உள்ள ஹிந்து அமைப்பினர் கோவில் கட்ட தகரத்தினாலான மேற்கூரை போடப்பட்டு சிறிய கோவிலில் சிலை ஒன்றும் வைக்கப் பட்டு இரவோடு இரவாக பூஜையும் செய்துவிட்டனர்.
மறுநாள் காலை பள்ளிவந்த மாண வர்கள் தங்கள் நாள்தோறும் விளை யாடும் மைதானத்தில் கோவில் ஒன்று இருப்பதைக் கண்டனர். இது எங்கள் விளையாட்டு இடம் என்று கூறிய போது கோவிலில் உட்கார்ந்திருந்த சில ஹிந்து அமைப்பினர். சாமி கும்பிட்டு விட்டு படிக்கப்போ… இங்கே எல்லாம் விளையாடக் கூடாது என்று கூறியுள் ளனர். நேரம் ஆக ஆக மாணவர்கள் அதிகம் வரத் துவங்கினர். வகுப் பறைகளை விட்டு வெளியே வந்து அனைத்து வகுப்பு மாணவர்களும் திரண்டு, எங்களை படிக்க விடுங்கள் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கோவிலை அமைத்து கலவரம் ஆக்கா தீர்கள் என்று கையில் தங்களின் பரீட்சை அட்டையில் எழுதப்பட்ட பதகைகளை ஏந்திய படி ஹிந்து அமைப்பினரை எதிர்த்து போராட்டம் நடத்தினர். ஆனால் அவர்கள் மாண வர்களை மிரட்டும் வகையில் செயல்படவே மாண வர்கள் அனைவரும் அருகில் உள்ள சாலைக்குச் சென்று அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வடபொன்பரப்பி காவல் ஆய்வாளர் மாணிக்கம், இளங்கோ, வீரன் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவர் களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மேலும் படிக்கச் செல்லுங்கள். உங்கள் மைதானம் உங்களிடமே ஒப்படைக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுத்த பிறகு மாண வர்கள் அனைவரும் பள்ளி திரும் பினர். கோவிலை அகற்றக்கோரி துவக்கப் பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.