ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

 உச்சநீதிமன்றம் – உயர்நீதிமன்றங்களில் 

உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா? 

தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக 

மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவது ஏன்?

 சமூக நீதி கோரி ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!


வாழ்க வாழ்க வாழ்கவே

தந்தை பெரியார் வாழ்கவே!


வாழ்க வாழ்க வாழ்கவே

அன்னை மணியம்மையார் வாழ்கவே!


வாழ்க வாழ்க வாழ்கவே

அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!


வாழ்க வாழ்க வாழ்கவே

தமிழர் தலைவர் வாழ்கவே!


வாழ்க வாழ்க வாழ்கவே

சமூகநீதிப் போராளிகள்

வாழ்க வாழ்க வாழ்கவே!


தேவை தேவை சமூகநீதி தேவை!

நீதிபதிகள் நியமனங்களிலும்

சமூகநீதி தேவை!


உச்சநீதி மன்றத்திலும்

உயர்நீதி மன்றத்திலும்

உயர்ஜாதி பார்ப்பனர்களின்

ஆதிக்கமா? ஆதிக்கமா?


ஜன நாயகக் குடியரசு என்பதெல்லாம் 

வெறும் பேச்சா? வெறும் பேச்சா?

அரசியல் சட்டம் உறுதிசெய்யும்

சமூகநீதியும் சமூகநீதியும் போயாச்சா? போயாச்சா?


உச்சநீதி மன்றத்திலும்

உயர்நீதி மன்றத்திலும்

நீதி பரிபாலனமா?

ஜாதி பரிபாலனமா?


நீதிபதியா? நீதிபதியா?

மத நஞ்சு கக்கும்

மத நஞ்சு கக்கும்

பேர்வழிகள் எல்லாம்

பேர்வழிகள் எல்லாம்

நீதிபதியா? நீதிபதியா?


தகுதி இருந்தும்

திறமை இருந்தும்

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு

உயர் பதவிகளை மறுப்பதேன்? மறுப்பதேன்?


உச்சநீதிமன்றமா?

உச்சிக்குடுமி மன்றமா?


ஆதிக்கம்! ஆதிக்கம்!!

உச்சநீதிமன்றத்திலே எண்பத்தைந்து 

விழுக்காடு (85%) உயர்ஜாதி ஆதிக்கம்!

உயர்ஜாதி ஆதிக்கம்!!


உயர்நீதி மன்றங்களில்

எண்பது விழுக்காட்டுக்கும் மேலாக

எண்பது விழுக்காட்டுக்கும் மேலாக

உயர்ஜாதி ஆதிக்கம்!

உயர்ஜாதி ஆதிக்கம்!


கேட்டீரா? கேட்டீரா?

நீதிபதிகள் நியமனங்களில்

நிகழும் அநீதியைக் கேட்டீரா?


ஒன்றிய அரசு என்றாலும்

கொலீஜியம் என்றாலும்

கோலோச்சுவது பார்ப்பனியமே!


வேண்டும் வேண்டும்

நீதிபதிகள் நியமனங்களிலும்

இட ஒதுக்கீடு வேண்டும்!


ஒன்றுபடுவோம் போராடுவோம்

சமூகநீதி கிட்டும்வரை

போராடுவோம் போராடுவோம்!


வெற்றி பெறுவோம்!

வெற்றி பெறுவோம்!

– திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *