தோழா முன்னேறு
வீரமணியோடு
பெரியார் படை சேரு வா, வா
இனமானம் வென்றாக
இளையோர் ஒன்றாக
உரிமைக் களம் காண வா, வா
தமிழ்நாடு என்றும்
பெரியார் மண்தான்!
அது அடி பணிந்து
எப்போதும் போகாது!
உயிரே போனாலும்
உரிமை விடமாட்டோம்
சுயமரியாதை வீழாதே!
கறுப்புச்சட்டை களம் புகுந்தால்
நெருப்பு பறக்கும்டா
ஜாதி வெறியை
விதைக்கும் கூட்டத்துக்கும்
அறிவு திறக்கும்டா
மத வெறுப்பை
விதைக்கும் கூட்டத்துக்கும்
அறிவு பிறக்கும்டா
சேதுக் கால்வாய்த் திட்டத்தை
சிறப்புடனே நிறைவேற்ற
தடை செய்யும் ஆரியத்தின்
சூழ்ச்சிகளைத் தூளாக்க
உணர்ச்சி கொந்தளிக்கும்
எழுச்சி மிகு பயணம்
’நீட்’ தேர்வை நீக்கிடவே
நாட்டு மக்கள் வரணும் (2)
மாநிலப்பட்டியலில்
கல்வியைக் கொண்டு வர
திராவிட மாடல் ஆட்சி
திசையெங்கும் வெற்றி பெற
(தோழா)
பொருளாதார ஒதுக்கீடு
பொல்லாத பெருங்கேடு
இருளாக்கும் நம் வாழ்வை
மீட்டெடுக்கும் துணிவோடு
சமூக நீதி தன்னைக்
காக்க வரும் பயணம்
சனாதனத்திற்கெதிராக
சங்கொலிக்கும் தருணம் (2)
துணிவான தெளிவான
முதலமைச்சர் கரம் வலுக்க
வழிகாட்டும் ஆசிரியர்
வீரமணியின் வழிநடக்க
(தோழா)
பாடல்: அதிரடி க. அன்பழகன்
இசை: விஜய் பிரபு
குரல்: முகேஷ்