சிரியா மற்றும் துருக்கியில் பூகம்பம் தாக்கி 4 நாட்கள் கழிந்துவிட்டது. இன்றும் மீட்பு பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. மீட்புப் பணிகளில் மனதை தொடும் பல நிகழ்வுகள் நடந்துவருகிறது.
சிரியாவின் வடக்கு பகுதியில் கட்டடச் சிதைவுகளில் தாய் தந்தை இருவரையும் இழந்த சிறுமி தனது தம்பி மீது வீட்டின் மேற்கூரை நசுக்கி விடாமல் இருக்க தனது முழங்கையால் தாங்கிக் கொண்டு இருந்தார்.
மீட்பு படையினர் அவரை மீட்கும் முன்பு அவரிடம் அதிக வலி உள்ளதா என்று கேட்க, ‘ஆமாம்! ஆனால், எனக்கு கவலை இல்லை, முதலில் எனது சகோதரனைக் காப்பாற்றுங்கள்’ என்று கூறியுள்ள காட்சி காணொலிகளில் அதிகம் பரவி வருகிறது.