பட்டுக்கோட்டை, பிப். 12- பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 29.1.2023 அன்று மாலை 4 மணி அளவில் பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையேற்று உரையாற்றிட நடைபெற்றது.
தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார், பட்டுக்கோட்டை கழக மாவட்ட தலைவர் அத்தி பட்டி பெ.வீரையன், பட்டுக்கோட்டை கழக மாவட்ட செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினார்.
இந்நிகழ்வில் தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவர் அ.பாலசுப்பிரமணியன், அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் பா.மகாராஜா, சேது பாவாசத்திரம் ஒன்றிய தலைவர் சி.ஜெகநாதன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பொ.சந்தோஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்லதம்பி, இரா.நீலகண் டன், பட்டுக்கோட்டை கழக மாவட்ட அமைப்பாளர் சோம.நீலகண் டன், மதியழகன், வி.ஆத்மநாபன், பேராவூரணி ஒன்றிய இளைஞரணி தலைவர் செ.கவுதமன், பொன்காடு சி.சந்திர மோகன், மாணவர் கழகத் தோழர் சி.ம.பண்பாளன், பே.தவமணி, மாவட்ட தொழிலாளர் அணி பொறுப்பாளர் முத்து.துரைராசன், மதுக்கூர் ஒன்றியம் அண்ணா துரை, தஞ்சை மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, குறிச்சி பழ.வேதாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர். சேது பாவாசத்திரம் ஒன்றிய இளைஞரணி தலைவர் சு.வசி நன்றியுரையாற்றினார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம் 1: பட்டுக்கோட்டை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக புரவலர் ஆசிரியர் சி. வேலு, சேதுபாவாசத்திரம் ஒன்றிய மேனாள் தலைவர் தா.பெரியராசன், கழக மாவட்ட துணைத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சா.சின்னக்கண்ணு, பட்டுக்கோட்டை ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் வீரக் குறிச்சி ஆரோக்கியராஜ் ஆகியோரின் மறைவிற்கு கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவர்களின் தொண்டுக்கு வீர வணக்கத்தை தெரிவித் துக் கொள்கிறது.
தீர்மானம் 2: சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சி விளக்கு தொடர் பரப்புரை பயண பொதுக்கூட்டத்தை பிப்ரவரி 28 ஆம் நாள் பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூரணியில் நடத்துவதற்கு அனுமதி அளித்த திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு இக்கூட்டம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 3: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொள்ளும் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பொதுக் கூட்டத்தை மாநாடு போல் மிகச் சிறப்பாக நடத்துவது என இக்கூட் டம் முடிவு செய்கிறது. மேலும் பேராவூரணியில் பரப்பரைக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் எழுச்சி மிகுந்த வரவேற்பு அளிப்பது எனவும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.
தீர்மானம் 4: 28.2.2023 அன்று சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க தொடர்பு பிரச்சார பயண பொதுக் கூட்டத்திற்கு தமிழர் தலைவர் அவர்களின் வருகையை முன்னிட்டு பொது கூட்டத்தை விளக்கி மாவட்டம் முழுவதும் சுவர் எழுத்து விளம்பரம் செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.
புதிய பொறுப்பாளர்:
பட்டுக்கோட்டை கழக மாவட்ட இளை ஞரணி செயலாளர் – பட் டுக்கோட்டை கா.தென் னரசு.