2024இல் இந்தியாவுக்கே புதிய விடியல் தி.மு.க.வினருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசு, தமிழ்நாடு

சென்னை, பிப். 12- கடந்த 2021இல் தமிழ்நாட்டிற்கு விடியல் ஏற்பட்டதுபோல, 2024இல் இந்தியா வுக்கே விடியலை ஏற்படுத்தும் நிலை வரப்போகிறது. அதற்கு நீங்கள் தயாராக இருங்கள் என்று திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார்.

சென்னையில் 10.2.2023 அன்று நடைபெற்ற ஒரு திருமண விழா வில் முதலமைச்சர் பேசியதாவது: அண்ணா மறைவுக்குப் பிறகு 1969இல் முதலமைச்சராக முத்தமி ழறிஞர் கலைஞர் பதவியேற்றது பிப்.10ஆம் தேதிதான். அதே தேதியில்தான் இந்த திருமணம் நடைபெறுகிறது. திருமண விழா வில் அமைச்சர்கள், தலைமை நிர் வாகிகள், மாவட்டச் செயலாளர் கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொள்வ தாக போடப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலோர் வரவில்லை. காரணம், ஈரோட்டில் நடக்கும் தேர்தல்.

நாடாளுமன்ற மாநிலங்கள வையில், பிரதமர் எதற்கும் பதில் சொல்ல முடியாத நிலையில் ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக் கிறார். நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, சேது சமுத் திர திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கேட்கிறார். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு குறித்து கேட்கி றார். அதற்கு பதில் இல்லை. வெளி நாட்டில் இருக்கும் கறுப்புப் பணத்தை எல்லாம் கைப்பற்றி, இந் தியாவில் ஒவ்வொரு குடிமகனுக் கும் ரூ.15 லட்சம் வங்கிக் கணக்கில் போடுவேன் என்றார். 15 ரூபாயா வது போட்டார்களா என்றால் இல்லை. அதேபோல, எய்ம்ஸ் என்ன ஆச்சு, பிரதமர் அடிக்கல் நாட்டி சென்றாரே என கனிமொழி கேட்டுள்ளார். அந்த எய்ம்ஸ் இது வரை என்ன ஆச்சு என்றே தெரிய வில்லை.

உதயநிதி ஒரு செங்கலை வைத் துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்த செய்தி பார்த்திருப்பீர் கள். நாடாளுமன்றத் தேர்தலின் போது இன்னொரு செங்கலை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடு வானே என்ற பயமாவது அவர்க ளுக்கு வர வேண்டாமா? அதே போல், ஆ.ராசா கேள்விகளுக்கும் பதில் இல்லை. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதும் அனைவரும் போய்விடுகிறார்கள். ‘கோரம்’ இல்லை என தயாநிதி மாறன் கூறுகிறார். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நிறை வேற்றப்பட்ட மசோதா பற்றி தமிழச்சி தங்கபாண்டியன் கேட் டால் எது எதற்கோ விளக்கம் சொல்கின்றனர். இப்படிப்பட்ட நிலையிலேதான், ஒன்றியத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 2021இல் எப்படி தமிழ்நாட்டிற்கு விடியலை ஏற்படுத்திக் கொடுத்தீர் களோ அதேபோல, 2024இல் இந் தியாவுக்கே விடியலை ஏற்படுத்தும் நிலை வரப்போகிறது. அதற்கு நீங் கள் தயாராக இருங்கள். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *