மார்ச். 7இல் தமிழர் தலைவர் சிதம்பரம் வருகை
பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்த கலந்துரையாடலில் முடிவு
சிதம்பரம், பிப். 12- சிதம்பரம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட் டம் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையில் புவனகிரியில் 10.2.2023 அன்று நடைபெற்றது.
எதிர்வரும் மார்ச் 7இல் சிதம் பரம் வருகை தர உள்ள தமிழர் தலைவர் ஆசிரியருக்கு வீரமணி அவர்களின் பொதுக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது கூட்டத்தில் மாவட்டச் செய லாளர் அன்பு சித்தார்த்தன் வர வேற்புரை ஆற்றினார்.
மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் முன்னிலை வகித்தார். கழக இணைச் செயலாளர் கழக பேச்சாளர் யாழ் திலீபன் கடவுள் மறுப்பு கூறி கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்த பாரதி, இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், வல்லம்படுகை அர்ச்சுனன், ஆண்டிப்பாளையம் முருகன், பொதுக்குழு உறுப்பினர் சுமதி, பரங்கிப்பேட்டை ஒன்றிய தலை வர் தென்னவன், ஒன்றிய செயலாளர் ஜெயபால், ஆசிர்வாதம், பாளையங்கோட்டை சூசை, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோ.நெடுமாறன் மற்றும் கழக பொறுப்பாளர்கள், பொய்யா மொழி ஆகியோர் கலந்து கொண் டனர். கூட்டத்தில் தமிழர் தலை வர் வருகையை மிகச் சிறப்பாக சுவர் விளம்பரம் மூலமும் தெருமுனை பிரச்சார மூலமும் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப் பட்டது.