கந்தர்வக்கோட்டை, அக் 31- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடு நிலைப் பள்ளியில் சிக்கனம் மற்றும் சேமிப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரி யர் பொறுப்பு மணிமேகலை தலைமை வகித்தார். ஆங்கில பட் டதாரி ஆசிரியை சிந்தியா அனை வரையும் வரவேற்றார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்ட அக்கச்சிப் பட்டி அஞ்சலகத்தின் கிளை அஞ்சல் அலுவலர் மோகன்தாஸ் கலந்து கொண்டு மாணவர்களிடம் சிறுசேமிப்பு குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார்.மாணவ, மாணவிகளுக்கு அஞ்சல் அலுவல கத்தில் சேமிப்புக் கண்க்கை தொடங்கி வைத்தார் . இந்நிகழ்வில் கலந்து கொண்ட இல்லம் தேடி கல்வி மய்யம் ஒன்றிய ஒருங்கிணைப் பாளர் ரகமதுல்லா சிக்கனம் மற் றும் சேமிப்பு நாள் குறித்து பேசிய தாவது:
உலக சேமிப்பு மற்றும் உலக சிக் கன நாள் அக்டோபர் 30,31 அன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப் படுகிறது.
வங்கிகள் மற்றும் அஞ்சல் அலு வலகங்கள் பணத்தை சேமிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த நாளில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
உலக சேமிப்பு நாள் அல்லது சிக்கன நாள் 1924ஆம் ஆண்டு அக் டோபர் 31-ஆம் தேதி இத்தாலியின் மிலானோவில் முதலாம் பன் னாட்டு சேமிப்பு வங்கி உலக சேமிப்பு வங்கிகள் சங்கம் கூடு கையின் போது ஏற்படுத்தப்பட்டது.
மாணவர்கள் சிக்கனம் மற்றும் சேமிப்பு குறித்து தெரிந்து கொள்ள வேண்டும், சேமிப்புப் பழக்கத்தை சிறுவயதிலேயே கற்றுக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு சேமிப்பதனால் தங்களுடைய படிப்புகள் மற்றும் பல்வேறு வகையான தேவைகளுக்கு நம்முடைய சேமிப்புப் பணத்தையே பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நம் பள்ளியில் கணித ஆசிரியர் மணிமேகலை அவர்களின் முயற் சியால் மாணவ, மாணவர்கள் சிறு சேமிப்பு கணக்குகள் தொடங்கி சேமித்து வருவது மிகுந்த பாராட் டுக்குரியதாகும்.
ஒவ்வொரு மனிதனும் சேமித் தால் நம்முடைய நாட்டின் பொரு ளாதாரம் ,வீட்டின் பொருளாதர மும் உயரும் என்று பேசினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் நிவின், செல்விஜாய் தனலெட்சுமி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.