திருச்சி, பிப்.12- நகர்ப்புற – கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், வறுமையைக் குறைப்பதன் ஒரு பகுதியாக தொழில் முனைவோர்களுக்கு நுண்கடன் நிதி சேவைகளை வழங்கிவரும் வங்கி சாராத நிதி சேவை நிறுவனமான வயா பின்சர்வ் நிறுவனம் லால் குடியைச் சேர்ந்த 45 வயதுப் பெண்மணி நாகலட்சுமிக்கு நுண்கடன் வழங்கி உதவியதால் இன்று அவர் உணவு விடுதி தொழிலை விரிவுபடுத்தி தமது வணிகம் வளர்ந்துள்ளதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனம் இதுபோன்று பல்வேறு தொழில் முனைவோருக்கு வருமானம் ஈட்டக்கூடிய வங்கி சாராத நுண் கடன்களை வழங்கி சொந்தமான நிறுவனங்களில் மகளிரின் பங்களிப்பை கணிசமாக அதிகரித்துள்ள தோடு 7 மாநிலங்கள் மற்றும் 266 கிளைகளில் 5.10 லட்சம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.