சென்னை பிப்.13 சென்னையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 3 வாலிபர்களை மீட்டு தனது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சூரியா (வயது 22), பாலாஜி (18), கவுதம் (21). இவர்களில் சூரியா தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரயில் படித்து வருகிறார். சூரியா மற்றும் பாலாஜி ஆகியோர் ஒரு இரு சக்கர வாகனத்திலும் கவுதம் மற்றொரு இரு சக்கர வாகனத்திலும் நேற்று முன்தினம் (11.2.2023) இரவு மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையில் சென்றனர். விவேகானந்தர் இல்லம் அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்முனையில் வந்த இரு சக்கர வாகனம் மீது சூரியா, பாலாஜி மற்றும் கவுதம் ஆகியோர் சென்ற இரு சக்கர வாகனம் மோதி, அதன் பின்னால் வந்த கார் மீதும் பலமாக அடுத்தடுத்து மோதி சாலையில் சரிந்து விழுந்தது. இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 3 பேரையும் மீட்டு தனது கார் மூலமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென் றார். பின்னர் 3 பேருக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. துறை சார்ந்த அமைச்சர் என்ற முறையில் தேவையான சிறப்பு சிகிச்சைகளை விரைவாக வழங்க மருத்துவர்களுக்கு மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். படுகாயம் அடைந் தவர்களை அழைத்து வந்தபோது அமைச்சராக இல்லாமல், உதவும் கரங்களை போன்று செயல் பட்ட மா.சுப்பிரமணியனுக்கு பாராட் டுகள் குவிகிறது.
சென்னை பிப்.13 சென்னையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 3 வாலிபர்களை மீட்டு தனது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சூரியா (வயது 22), பாலாஜி (18), கவுதம் (21). இவர்களில் சூரியா தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சூரியா மற்றும் பாலாஜி ஆகியோர் ஒரு இரு சக்கர வாகனத்திலும் கவுதம் மற்றொரு இரு சக்கர வாகனத்திலும் நேற்று முன்தினம் (11.2.2023) இரவு மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையில் சென்றனர். விவேகானந்தர் இல்லம் அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்முனையில் வந்த இரு சக்கர வாகனம் மீது சூரியா, பாலாஜி மற்றும் கவுதம் ஆகியோர் சென்ற இரு சக்கர வாகனம் மோதி, அதன் பின்னால் வந்த கார் மீதும் பலமாக அடுத்தடுத்து மோதி சாலையில் சரிந்து விழுந்தது. இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 3 பேரையும் மீட்டு தனது கார் மூலமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் 3 பேருக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. துறை சார்ந்த அமைச்சர் என்ற முறையில் தேவையான சிறப்பு சிகிச்சைகளை விரைவாக வழங்க மருத்துவர்களுக்கு மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். படுகாயம் அடைந் தவர்களை அழைத்து வந்தபோது அமைச்சராக இல்லாமல், உதவும் கரங்களை போன்று செயல் பட்ட மா.சுப்பிரமணியனுக்கு பாராட்டுகள் குவிகிறது.