தஞ்சை, பிப்.14- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் புகழ்பெற்ற நிறுவனமான சென்னை, ராயல் என்பீல்டு அகாடமி கலந்து கொண்ட வளாக நேர்காணல் (Campus Interview) நடைபெற்றது.
வல்லம். பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் தொழிலக பயிலக இணைப்பு துறையின்(Industry Institute Interaction Cell) கீழ் இயங்கும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை (Training and Placement Cell) வாயிலாக இப்பாலிடெக் னிக்கில் பயிலும் மூன்றாமாண்டு மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் புகழ்வாய்ந்த தொழிற்சாலை களுடன் ஒருங்கிணைந்து நடத்தப்படும் வளாக நேர்காணல் மூலம் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் 100% வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
2022–_2023ஆம் ஆண்டில் சென்னை அப்பல்லோ டயர்ஸ் (Apollo Tyres Pvt. Ltd., Chennai), புதுச்சேரி லூகாஸ் டிவிஎஸ் (Lucas TVS, Pondicherry), சென்னை யமஹா மோட்டார்ஸ (Yamaha India, Chennai), புதுச்சேரி ரானே மெட்ராஸ் (Rane Madras, Pondicherry).
விருதுநகர் டிவிஎஸ் சுந்தரம் பிரேக் லைனிங்ஸ் லிமிடெட் (TVS Sundaram Brake Linings Ltd, Virudhunagar). திருச்சி ஆனந்த் என்ஜினியரிங் பிரை வேட் லிமிடெட் (Anand Engineering Private Ltd., Trichy). சென்னை எஸ்.கே. எண்டர் பிரைசஸ் (SK Enterprises, Chennai), சென்னை டிவிஎஸ் டிஎஸ் (TVS-TS, Chennai). சென்னை நோக்கியா சொல்யூஷன் (NOKIA Solutions Pvt. Ltd., Chennai), கோயம் புத்தூர் லார்சன் & டூப்ரோ (Larsen & Toubro, Coimbatore). சென்னை செயின்ட் கோபைன் (Saint Gobain, Chennai) மற்றும் சென்னை சல்காம்ப் பிரைவேட் லிமிடெட் (Salcomp Manufacturing India Pvt. Ltd., Chennai) ஆகிய புகழ்வாய்ந்த தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பெரி யார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நேர்காணல் நடைபெற்று வருகிறது.
8.2.2023 அன்று சென்னை ராயல் என்பீல்டு அகாடமி நடத்திய வளாக நேர்காணல் வாயிலாக சுமார் 100 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக் கின்றார்கள். வளாக நேர்காணலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா பணி ஆணைகளை வழங்கி பாராட்டினார்.