ஆண்டிமடம்,பிப்.14- அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ஆண்டிமடம் வன்னியர் திருமண மண்டபத்தில் 5.2.2023 ஞாயிறு மாலை 6:00 மணி அளவில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திர சேகரன் தலைமை வகித்தார்.
ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன் கடவுள் மறுப்பு கூறினார். மாவட்ட செயலாளர் க. சிந்தனைச் செல்வன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.மாவட் டத் தலைவர் விடுதலை நீலமேகன், மண்டல தலைவர் இரா. கோவிந்த ராஜன் மண்டல செயலாளர் சு. மணி வண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ், மாநில இளைஞரணி துணை செயலாளர் அறிவன், மாவட்ட ப.க. தலைவர் தங்க. சிவமூர்த்தி மண்டல இளைஞரணி செயலாளர் பொன் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் க.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்து பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற கருத்துகளை கூறினர்.
பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நீண்ட இடை வெளிக்குப் பிறகு ஆண்டி மடத்தில் தலைவர் பொதுக்கூட்டத்தில் உரை யாற்ற வருகைதருவது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான செய்தியாகும். 90 வயதி லும் நாட்டை சுற்றிச் சுற்றி மக்களுக்காக உழைக்கும் மகத்தான தலைவரின் சமூகநீதிப்பயணத்தை வெற்றிபெறச் செய்வது நமது கடமய்யாகும். இந்த நிகழ்சியை கிராமப்புற மாநாடு போல் நடத்திட வேண்டும் அதற்கு அனை வரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விளக்கி சிறப்புரையாற்றினார்.
கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் கூட்டம் நடைபெற நிதி உதவி தருவதாக அறிவித்துள்ளனர்.
ப.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
சமூக நீதியை பாதுகாக்கவும் திராவிட மாடல் ஆட்சியின் தத்து வத்தை விளக்கியும் பரப்புரை பயணம் மேற்கொள்ளும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் பெரும் முயற்சியை இந்த கலந்துரை யாடல் கூட்டம் பாராட்டி, வரவேற்று, நன்றி தெரிவிக்கிறது.
சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்கப் பரப்புரை பயணத்தில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வருகை தரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதெனவும் மார்ச் எட்டாம் தேதி அன்று (8.3.2023) ஆண்டிமடத்தில் நடைபெற உள்ள வரவேற்பு பயண பொதுக்கூட்டத்தை கிராமப்புற மாநாடு போல் சிறப்பாகவும் எழுச்சி யோடும் நடத்திடுவதெனவும் ஒரு மனதாக முடிவு செய்யப்படுகிறது. பொதுக்கூட்டத்தை விளம்பரப்படுத்த சுவரெழுத்து பிரச்சாரம் செய்வதெ னவும் விளம்பரப் பதாகைகள் சுவ ரொட்டிகள் அடித்து ஒட்டுவதெனவும் முடிவு செய்யப்படுகிறது.
இளைஞர் அணி பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பில் பெரியார் வீர விளை யாட்டு கழகத்தின் மூலமாக இளைஞர் களுக்கு சிலம்பாட்ட பயிற்சி முகாமை விரைவில் துவக்குவதென முடிவு செய்யப்படுகிறது.
மாநில இளைஞரணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சு.அறிவன் மாவட்ட தொழிலாளர் அணி பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டுள்ள தா.மதியழகன், வெ இளவர சன், சி.கருப்புசாமி ஆகியோருக்கு இந்த கூட்டம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
புதிய பொறுப்பாளர்கள்
அரியலூர்:
ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து.
செந்துறை ஒன்றியம்
அமைப்பாளர்: பரணம் இராமதாஸ்
துணை தலைவர்: பொன்பரப்பி சுந்தரவடிவேல்
துணை செயலாளர் குழுமூர் சுப்பராயன்.
பங்கேற்றோர்
மாவட்ட அமைப்பாளர் ரத்தின. ராமச்சந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் இரா.திலீபன்,மாவட்ட ஆசிரியர் அணி தலைவர் இரா ராஜேந் திரன் மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் தா. மதியழகன் செயலாளர் வெ.இளவரசன், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக முருகன். ஒன்றிய அமைப்பாளர் கோ.பாண்டியன், துணை தலைவர் இரா.எ.இராம கிருட் டிணன், அமைப்பாளர் பன்னீர் செல்வம், ஆர்.பிச்சமுத்து, அ.குப்பம் ந.சுந்தரம், எஸ். பட்டுசாமி, சி.செல்வரங்கம், செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர் ராசா.செல்வக் குமார், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் வீராக்கன் விஷ்ணு, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆ.இள வழகன், அரியலூர் சி.சிவக்கொழுந்து, மறவனூர் ப.மதியழகன், பெரியாக் குறிச்சி சோ.க.சேகர், பெ.கி.புரம் இரா.பாலமுருகன், கோவில், கீழமாளிகை மு.ரஜினிகாந்த், வீராக்கன் ர.தினேஷ் உத்திரக்குடி ஆ.ஜெயராமன், கோவில் வாழ்க்கை செ. நித்தியானந்தம், பிரேம், அய்யாதுரை, சிவராமன், செல்வக் குமார், பாலசங்கர், மீன்சுருட்டி அக நிலவன், ஆண்டிமடம் சுந்தரவடிவேல், நெய்வேலி நா.பாவேந்தர் விரும்பி, வடலூர் இரா.குணசேகரன் உள் ளிட்டப் பொறுப்பாளர்களும் தோழர் களும் சிறப்பாக பங்கேற்றனர்.