14.2.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மனிதர்களை அடித்துக் கொல்லும் செய்திகள் குறித்து இந்திய ஊடகங்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை என்கிறார் எழுத்தாளர் ஆகார் படேல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அதானி விவகாரம் தொடர்பாக நிபுணர் குழு விசாரிக்க ஆட்சேபம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நிபுணர் குழுவுக் கான வரையறையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யவும் தயார் என ஒன்றிய அரசு தெரிவித் துள்ளது.
தி டெலிகிராப்:
* ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம், ஒன்றிய பட்ஜெட்டில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இருப்பதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றி வருகிறது, என தேசியத் தொழி லாளர் கூட்டமைப்புகள், தொழிற்சங்கங்கள், அமைப் புகள் மற்றும் தனிநபர்கள் குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* நான்கு ஆண்டுகள் ஆகியும் மக்களவைக்கு துணை அவைத் தலைவரை ஏன் தேர்வு செய்யவில்லை என உச்ச நீதிமன்றம் கேள்வி.
நாடாளுமன்றத்தில் அதானி பற்றி பேசும்போது பிரதமர் மோடியின் கைகள் நடுங்கின என ராகுல் காந்தி பேச்சு.
– குடந்தை கருணா