ஆற்றில் அடித்துக் கொண்டு போன நரி ஒன்று ‘உலகம் போச்சு, உலகம் போச்சு’ என்று கத்தியது.
அதற்குப் பரிதாபப் பட்டு அதனைக் கரைக் குக் கொண்டுவந்தார்கள்.
‘உலகம் போச்சு, உலகம் போச்சு!’ என்று ஓலமிட்டாயே, அப்படி என்றால் என்ன அர்த் தம்? என்று கேட்டபோது, ‘ஆற்றில் அடித்துச் சென்றால், என்னைப் பொறுத்தவரை உலகம் போச்சுதானே!’ என்ற தாம் நரி!
சரி, இப்போது என்ன பிரச்சினை?
அதுவா? தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘உலகமே கடும் நெருக் கடியில் இருக்கிறது!’ என்று பேசியுள்ளாரே!
– ‘தினமலர்’, (14.2.2023, பக்கம் 11)