முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களது படத்திறப்பு– நினைவேந்தல் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி வீர வணக்க உரை

4 Min Read
- Advertisement -

பொத்தனூர், நவ.28 முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்,  பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் மேனாள் தலைவர் நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் க.ச.என்று மக்களால் அன்போடுஅழைக்கப்படும் பொத்தனூர்க. சண்முகம் அவர்களது படத்திறப்பும்,புகழ் சூட்டும், வீரவணக்க கூட்டம் 25.11.2026 அன்று காலை 10.30 மணியளவில் வட்டார மாநாடு போல் பொத்தனூர் பி.வி.கே. சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.

வீரவணக்க நினைவேந்தல் கூட்டத்திற்கு திராவிடர் கழகக்காப்பாளர் சேலம் பழனி.புள்ளையண்ணன்  தலைமை தாங்கி க.ச.வின் படத்தைத் திறந்து வைத்தார்.

கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்கு ரைஞர் அ.அருள்மொழி வீரவணக்க உரையாற்றினார். அவரது உரையில், ‘‘சுயமரியாதைச் சுடரொளி க.ச. அவர்கள் திராவிடர் கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை உறுதிமிக்க பெரியாரின் பெருந்தொண்டராக வாழ்ந்து நமக்கு வழிகாட்டியுள்ளார். ஆசிரியர் மாணவராக இருந்தபொழுது அவரை அழைத்து வந்து பொத்தனூரில் கூட்டம் நடத்தியுள்ளார் என்ற பல்வேறு வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்தார்.

மருத்துவக் கல்லூரி மாணவர் களுக்குப் பயன்பட அவரது உடல் கொடையாக வழங்கி, அவர் பாடமாக அங்கும் இருக்கிறார். அவரது வாழ்வு நமக்கு என்றும் பாடமாகத் திகழும் என்று குறிப்பிட்டார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ. ஜெயராமன், தலைமைச்செயற்குழு உறுப்பினர் ஈரோடு த.சண்முகம் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

தமிழ்நாடு மேனாள் அமைச்சர் மருத்து வர் மதிவேந்தன், கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் தனியரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த செல்வராஜ், தங்கமணி, பேரூராட்சித் தலைவர் கருணாநிதி, பேராசிரியர் ப.காளிமுத்து, மதுரை வரதராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில கிராமப் பிரச்சாரச் செயலாளர் இராம.அன்பழகன், கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை பெரியார் செல்வம், மாநில ப.க. அமைப்பாளர் வழக்குரைஞர் இளங்கோ, மாநில தொழிலாளரணி துணைச் செயலாளர் வீரமுருகன், திருச்செங்கோடு மாவட்டத் தலைவர் சரவணன், நாமக்கல் மாவட்டச் செயலாளர் அசேன், கரூர் மாவட்ட தலைவர் குமாரசாமி, மேட்டூர் மாவட்டக் காப்பாளர் கவிஞர் சிந்தாமணியூர் சுப்பிரமணி, தமிழ் ராஜேந்திரன், ஆத்தூர் மாவட்டத் தலைவர் சுரேஷ், சேலம் மாவட்டத் தலைவர் ராஜூ, நாமக்கல் மாவட்டத் தலைவர் வை.பெரியசாமி, கடவூர் மணிமாறன், சேலம் ப.கந்தசாமி நன்செய்ப் புகழூர் அழகரசன் ஆகியோர் க.ச – அவர்களது தொண்டின் சிறப்புப்பற்றியும், கொள்கை உறுதியோடு இறுதிவரை பின்பற்றிய மகத்தான பெரியார் பெருந்தொண்டர் என்று வீரவணக்கவுரையில் பதிவு செய்தனர்.

கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் காணொளி வாயிலாக க.ச.வின் நம்பிக்கை, நாணயம், ஒழுக்கம், அவரது தொண்டறம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறி நெகிழ்வுரையாற்றினார். (முழு உரை நாளை).

நிகழ்வில் க.ச.வின் குடும்பக் குருதி உறவுகள் செங்குட்டுவன் – சாந்தி தமிழரசி – விவேகானந்தன், மலர் க்கொடி – ரவீந்திரன், கலைமணி – மேகலா, மகிழினி,சிந்துஜா – நிருபன் சக்ரவர்த்தி, நிதர்சன், ருத்ரன், திருகம்பன்- புவனேஷ்வரி, வித்யா – சரண், மாசிலாமணி -ரிதானி, விஸ்ருத், ஜெயமணிகண்டன் – அனிதா, சிறீநிகா, சிவக்குமார் குடும்பம், மணிமேகலை குடும்பம், காமேஸ்வரி, எஸ்பிஎம் குடும்பம், சண்முகம் குடும்பம்,

திராவிடர் கழகம்

சேலம் மாவட்டம்

மாவட்டச் செயலாளர் சரவணன், தமிழர் தலைவர், இளவழகன், இளவரசன், காளியப்பன், பரமசிவம், பேங்க் ராஜு, சுஜாதா, கமலம், ராமன், கந்தசாமி, பேரா.சேலம் வீரமணி,

நாமக்கல் மாவட்டம்

செல்வகுமார், சாகுல்அமீது, அன்புமணி, பி.சுந்தரம், மகாலட்சுமி. மாவட்ட ப.க.செய லாளர் அறிவாயுதம்.பரமத்தி செங்கோடன், அறிவழகன் சத்தியசீலன்.முத்துக் கண்ணன். த.மு.எ.க.முத்து சரவணன், நாங்கள் இலக்கியம் அன்பழகன், பாலமுருகன், சுந்தரராஜன், தே.மு.தி.க.வேலுசாமி, பாலாஜி துரைசாமி, த.வெ.க.பிரபாகரன், பழனிவேல், தம்பி செல்வராஜ், செந்தில்நாதன்.

கரூர் மாவட்டம்

சே.அன்பு, வே.ராஜு, ம.காளிமுத்து, செகநாதன், இரா.பெருமாள், இரா. விடுதலை, மு.வடிவேல்,வெ.அறிவுக்கண்ணன், இரா.பிரபு, காவிரி கு.கோவிந்தராசு, மோகன், ச.பழனி யப்பன், அலெக்ஸ்,, சரவணன்.

ஆத்தூர் மாவட்டம்

மாவட்டக் காப்பாளர் த. வானவில், மாநில ப.க.பொதுசெயலாளர் வா. தமிழ் பிரபாகரன், வா.முருகானந்தம், மு.மனோகரன், ப. விஜய ஆனந்த்

ஈரோடு மாவட்டம்

மாவட்டத் தலைவர் து. நல்லசிவம், ப.சத்தியமூர்த்தி, செ.பிரகாசன், தமிழ்ச் செல்வன், ராஜேஸ்வரி, அன்பரசு, யோகா னந்தம், பொன்முகிலன், கோவிந்தன்,

மேட்டூர் மாவட்டம்

மாவட்ட தலைவர் கா.நாபாலன், மாவட்டச் செயலாளர் ப.கலைவாணன், கோவி.அன்புமதி,ஓமலூர் சவுந்திரராசன், முல்லைவேந்தன், இ.பி. ராஜு, இரா.கலை யரசன், அ.ப.ராஜேந்திரன், கு.ஏழுமலை, இரா.முத்துக்குமார், மா.இளங்கோவன், அருள்மணி, செயபால், சுந்தரி,

திருச்செங்கோடு மாவட்டம்

மாவட்டக் காப்பாளர் ஆ.கு.குமார், இரா.ராசசேகரன், க.பொன்னுசாமி, சீனிவாசன், இந்திய கண சங்கத் தலைவர் பேரா.முத்துசாமி, காங்கிரஸ் கமிட்டி செல்வி மணி,ம.தி.மு.க பவுன்ராஜ், மு.இராஜசேகரன், த.ராமசாமி,பா.ம.க ஆர்.சித்தார்த்தன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை. ப.கவரி சங்கர், அருள், செங்குட்டுவன், சந்திரசேகரன்,மன்னை சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டு அவரது படத்திற்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்.வருகை தந்த அனைவருக்கும் க.ச.வின் குடும்பம் சார்பாக செங்குட்டுவன் – சாந்தி, கலைமணி – மேகலா ஆகியோர் நண்பகல் உணவளித்தனர். க.ச. நினைவேந்தல் வீர வணக்கக் கூட்டம். அவரது உடல் கொடையாக வழங்கப்பட்டது- புதிய சிந்தனையை இளைஞர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *