தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் மானமிகு மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொன் விழா ஆண்டில் (27.11.1977) அடியெடுத்து வைக்கிறார்.
சுயமரியாதை இயக்க – திராவிட இயக்கக் குடும்பத்தில் பிறந்து, அந்தக் கொள்கைப் பாலை அருந்தி, தமிழ்நாட்டின் பொதுவாழ்வில் அசைக்க முடியாத பெருஞ் சக்தி யாக உதயமாகி, ஒளிபரப்பக் கூடிய வர்தான் அருமைத் தம்பி உதயநிதி ஸ்டாலின்!
தி.மு.க.வில் இளைஞர்
பாசறையை மிக வலுவாகக் கட்ட மைத்தவர்!
அதனால்தான், அவரின் பிறந்த நாள் ‘‘இளைஞர் எழுச்சி’’ நாளாகக் கொண்டாடப்படுகிறது.
அவரின் சுயமரியாதை – பகுத்தறிவுக் கொள்கையின் வாள் வீச்சு, எதிரிகளின் சப்த நாடிகளையும் ஒடுங்கச் செய்கிறது.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டு மானப் பணிகளைத் தொடங்காததை விமர்சிக்கும் வகையில், ஒரு செங்கல்லைக் கையில் எடுத்துக் கொண்டு மேற்கொண்ட பிரச்சார யுக்தி, தேர்தல் களத்தையே ஒரு கலக்குக் கலக்கியது.
எந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும், அதில் தனித்தன்மை யான முத்திரைகளைப் பதிக்கக் கூடிய – இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம்! சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்போடு பணியாற்றுகின்றார். கட்சிப் பணிகளிலும் அவர் பங்கு மகத்தானது.
திராவிட இயக்கம் என்பது காரிருள் சூழ்ந்த தமிழ்நாட்டைப் புரட்டிப் போட்டு, புது வெளிச்சம் தந்த வெண்தாடி வேந்தரின் சிந்தனை வேரில் பழுத்த ஒன்று.
தலைமுறை தலைமுறையாகத் தலைதூக்கி வீறுநடை போடு வதற்கு வீரர்கள் உதயமாகிக் கொண்டே இருப்பார்கள் என்பதற்கு அடையாளமே அருமைத் தம்பி மானமிகு உதயநிதி!
அவர் பிறந்த நாளில், தாய்க் கழகத்தின் சார்பில் அன்பு கெழுமிய வாழ்த்துகள்!
அவர் வளர்ச்சி, நம்மினத்தின் வளர்ச்சி, எழுச்சி!
சுயமரியாதைச் சுடரேந்தி நீடு வாழ வாழ்த்துகிறோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
26.11.2026
