இன்றைக்கு பா.ஜ.க. சொல்லும் ஒரே அரசு? ஒரே கலாச்சாரம்? ஒரே மதம்? ஒரே, ஒரே என்று சொல்கிறார்களே அதற்கு மூலம் எங்கே இருக்கிறது? இதோ கோல்வால்கர் பேசுகிறார் “இன்று நமக்குள்ள அரசியல் சாசனத்தை உரு வாக்கியவர்கள் நமது ராஷ்டிரமானது உடலைப் போன்று பிரிக்கப்பட முடியாத ஓருறுப்பு தேசியம் போன்றது என்பதில் உறுதியான நம்பிக்கை வாய்ந்தவர்கள் அல்ல என்பது நமது அரசியல் சாசனத்தை சமஷ்டி (கூட்டாட்சி) அமைப்பாக நிறுவியதிலிருந்து புலனாகிறது. நமது ராஜ்யமானது பல மாநிலங்களின் ஒன்றியம் என்று வர்ணிக்கப் படுகின்றது. இதற்கு முந்தைய அமைப்பில் வெறும் மாகாணமாக இருந்தவையெல்லாம், மாநிலங்கள் என்ற கவுரவ அந்தஸ்துடன் எத்தனையோ தனி அதிகாரங்களு டன் விளங்குகிறது. முற்காலத்தில் ஒருமித்த ஒரே தேசிய வாழ்க்கை தனி உரிமை பெற்ற பல அரசியல் அமைப்பு களாக துண்டாடிய போது, தேசிய ஒருமைப்பாடு சிதைக்கப் பட்டதற்கும் தோல்வி அடைந்ததற்கும் விதைகள் விதைக் கப்பட்டன”
– கோல்வால்கர் எழுதிய ‘ஞானகங்கை’
நூலிலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி – திருப்பூர், 4-2-2023