பொது வாய்ப்பும், பதவியும் – பொது உரிமை வசதியும்!

1 Min Read

ஞாயிறு மலர்

பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் அரசியல் நிர்வாகப் பதவிகளை இந்தியருக்குப் பெருமளவில் பெறுவதற்கான கோரிக்கைப் போராட்டத்தைப் பொதுவான பெயரில் நடத்தி, அப்படிப் பெற்ற வாய்ப்புகளைப் பெரும்பாலும் தங்களுடைய முற்றுரிமைகளாக அனுபவித்துக் கொள்ளும் வகையில் சமுதாய – மத – மொழி பண்பாட்டு அமைப்புகளை மேல் வர்ணத்தார் தொடர்ந்து கட்டிக் காப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.

மேல்வர்ணத்தார். பொதுவாய்ப்பிலும் பதவியிலும் பின்தங்கிய வருக்கு ஒதுக்கீடு கூடாதென்றனர். ஆனால் பொது உரிமையிலும் வசதியிலும் மேல்ஜாதி அடிப்படையில் சலுகை கேட்டனர்.

இருப்புப் பாதைகள் போடப்பட்டு, தொடர் வண்டிப் பயணம் தொடங்கிய காலத்தில் நான்கு வகைப் பெட்டிகள் இருந்தன. அவற்றை நான்கு வர்ணத்தாரும் தனித்தனியாகப் பயன்படுத்தும் படியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென ஹிந்துமத வேதியக் கூட்டம் வேண்டிற்று. ஆனால், சென்னை இருப்புப் பாதையின் முதன்மைப் பொறியாளர் இதற்கு உடன்பட மறுத்து, வெவ்வேறு வசதிகள் உள்ள பெட்டிகளைச் செலுத்துகின்ற கட்டணத்தின் அடிப்படையில் மட்டுமே இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், ஜாதியடிப்படையை ஏற்க இயலாததென்றும் கூறிவிட்டார். 

(P-127, India Britannica-by Geoffrey Moorhouse-Paladin Books. London-Published in 1984)‑

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *