ஈரோட்டிலேயே…
*தேர்தல் நடக்கும் ஈரோட்டையடுத்த பக்கத்து மாவட்டங் களில் முதலமைச்சர் கள ஆய்வு நடத்துவது தவறு.
– அ.தி.மு.க. குற்றச்சாட்டு
>>ஓ, ஈரோட்டிலேயே நடத்தவேண்டும் என்கிறார் களா?
எங்கே போச்சு?
*மேகாலயா, நாகலாந்து தேர்தலில் 80 பி.ஜே.பி. வேட்பாளர் களில் 70 பேர் கிறிஸ்தவர்கள்.
>>இப்பொழுது எங்கே போச்சு சிறுபான்மையினர் எதிர்ப்பு?
ஓ, அந்தக் கடவுளுக்கா?
*அமர்நாத் பனிலிங்கம் – 12 ஜோதிர் லிங்க தரிசனம்.
>>ஓ, கோடை காலத்தில் காணாமல் போகும் அந்தக் கடவுளுக்கா?
அறிவுரைதான் மலிவானது!
*லோக்சபாவில் எம்.பி.,க்களுக்குள் வாக்கு வாதத்தில் ஈடுபடக் கூடாது. இதை மாநகராட்சியாக மாற்றாதீர்கள்.
– ஓம்பிர்லா, மக்களவைத் தலைவர்
>>ஆமாம், சபாநாயகராக இருந்து ‘பிராமணர்கள்’ சங்க மாநாட்டில் பேசலாம்!
யாருக்கு இந்த அறிவுரை?
*அரசியல் குறித்து ஆளுநர்கள் அதிகம் பேசக்கூடாது.
– ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன்
>>யாருக்கு இந்த அறிவுரை? ஆளுநர்கள் ஆர்.என்.ரவிக்கும், தமிழிசைக்குமா? சேம் சைடு கோல் என்பது இதுதானோ!