கோவை, பிப். 18- மறைந்த கு.வெ.கி. ஆசான் அவர்களின் துணைவியார் சாரதாமணி அம்மையார் பிப் 11.ஆம் தேதி இரவு வட கோவையில் உள்ள அவரது இல்லத்தில் மறைவுற்றார்.
ஆசான் மறைவிற்கு பிறகு மனித நேய அடிப்படையில் பல பேருக்கு உதவியாக வாழ்ந்தவர் சிறந்த கல்வியாளர், சில புத்தகங் களும் எழுதியிருக்கிறார்.
வடகோவை பேருந்து நிறுத் தத்திற்கு அருகில் என்.டி.சி.கல் வியகத்தையும், மகளிர் விடுதி யையும் நடத்திக் கொண்டிருந்த அம்மையார் அவர்கள் நிறை வாழ்வு வாழ்ந்து மறைந்திருக் கிறார். அவருடைய இழப்பு அவரு டைய குடும்பத்தினருக்கும் திராவிடர் கழகத்திற்கும் முற் போக்கு அமைப்புக்களுக்கும் பேரிழப்பாகும்.
பிப். 12ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் வடகோவையில் உள்ள அம்மையார் இல்லத்தில் இருந்த அவரது உடலினை கழக பொதுக்குழு உறுப்பினர் திலக வதி, மாவட்ட மகளிரணி த.கவிதா, திருமண நிலையப் பொறுப்பாளர் ராஜேஸ்வரி, ஜோதிமணி ஆகிய மகளிர் முன் வந்து சுமந்து சென்று வாகனத் தில் ஏற்றி இறுதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
பாப்பநாயக்கன்பாளையம் மின் மயானத்தில் நடைபெற்ற இறுதி மரியாதை நிகழ்வில் திரா விடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியை கோவை மண்டல செயலாளர் ம.சிற்றரசு வாசித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து விசிக மண்டல செயலாளர் சுசி கலையரசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் உரை ஆற்றினர்.
இரங்கல் கூட்டத்தில் கோவை மாவட்ட கழக மாவட்ட தலைவர் தி.க. செந்தில் நாதன், மாவட்ட காப்பாளர் ம சந்திர சேகர், மாவட்ட செயலாளர் க.வீரமணி, மாநில இளை ஞரணி அமைப்பாளர் ஆ.பிர பாகரன்,மண்டல செயலாளர் ச.சிற்றரசு, மாநகர தலைவர் வே.தமிழ்முரசு, பழ.அன்பரசு, ச.திராவிடமணி, தொழிலாளர் அணி வெங்கடாசலம், முத்து மாலையப்பான், இலைக்கடை செல்வம், மேட்டுப்பாளையம் மாவட்ட கழக தலைவர் சு.வேலுச் சாமி, சாலைவேம்பு சுப்பையன்,
ப.க. தரும வீரமணி, கவிகிருட்டி ணன் , பொள்ளாச்சி மாரிமுத்து, ரவிச்சந்திரன், நாகராஜ், லூகாஸ் பீட்டர், ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பக காப்பாளர் அ.மு.ராஜா உள் ளிட்ட ஏராளமான கழக தோழர் களும் மற்றும் வழக்குரைஞர் செந்தில் குமார், நிர்மல், வெங்கட், தோழர் குத்தூசி படிப்பக தோழர் கதிரவன், சூளூர் சரவணக்குமார் உள்ளிட்ட பல்வேறு தோழர் களும் மற்றும் அம்மையாரின் உறவினர்களும் வருகை தந்து இறுதி மரியாதை செலுத்திய பின் பாப்பநாயக்கன் பாளையம் மின் மயானத்தில் உடல் எரியூட்டல் செய்யப் பட்டது.
இறுதிவரை பகுத்தறிவாள ராக வாழ்ந்து மறைந்த சாரதா மணி ஆசான் இறுதி ஊர்வலம் எந்த வித சடங்குகளுமின்றி தொடங்கி பகுத் தறிவு நெறிப்படி இறுதி நிகழ் வுகள் நடைபெற்றது.
அய்யா ஆசான் அவர்களுக்கு பிறகு அவரது குடும்பத்தில் பகுத்தறிவு பணியில் தொடர்ந்து தொண்டாற்றி வரும் கு.வெ.கி. செந்தில் மற்றும் அவரது குடும்ப உறவுகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தோழர்கள் தெரிவித்து கொண் டனர்.
சாரதாமணி அம்மையார் மறைவு செய்தி அறிந்ததும் மதி முக தலைமை நிலையச் செயலா ளர் துரை வைகோ அவர்கள் தலைமையில் மதிமுக தோழர் கள் வருகை தந்து மரியாதை செலுத்தியதோடு குவெகி செந்தில் மற்றும் குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறினர்.
தபெதிக கோவை கு.இராம கிருட்டிணன், மற்றும் சூளூர் பாவேந்தர் பேரவை புலவர் செந்தலை ந.கவுதமன் ஆகியோர் தலைமையில் அவ்வமைப்பினர் இறுதி மரியாதை செலுத்தினர்.