சென்னை,பிப்.18- தமிழ்நாடு உயர் கல்வித் துறை செயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணை யில் குறிப்பிடப்பட் டுள்ளதாவது, கோவை தொழில்நுட்பக் கல்லூரி வழங்கும் எம்.எஸ்சி பயன் முறை (அப்ளைடு) வேதியியல், பாரதியார் பல்கலை., திருப்பதி சிறீ வெங்கடேஸ்வரா பல் கலை.யின் எம்.எஸ்சி ஆர்கானிக் வேதியியல், திருச்சி நேஷனல் கல்லூரி எம்.எஸ்சி பகுப்பாய்வு வேதியியல், பனாரஸ் அய்அய்டி மற்றும் வாரணாசி இந்து பல்கலை. வழங்கும் எம்.டெக் தொழிற்துறை வேதி யியல், பாரதிதாசன் பல்கலை.யின் எம்.எஸ்சி வாழ்க்கை அறிவியல் ஆகியவை எம்.எஸ்சி வேதியி யலுக்கு இணையானவை அல்ல. இவர்கள் எம்.எஸ்சி வேதியியல் கல்வித் தகுதிக்கான அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வழங்கும் எம்.ஏ. மொழியியல், எம்.ஏ. ஆங்கிலப் படிப்புக்கு இணையானதாக ஏற்கப் படாது. மேலும், கோவா பல்கலை., திருப்பதி சிறீ வெங்க டேஸ்வரா பல்கலை. மற்றும் பெங் களூர் பல்கலை. வழங்கும் பிஏ ஆங்கிலம் அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு இணையாக கருதப்படாது. மேலும், சென்னை பல்கலை. வழங்கும் பி.காம் கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப், அழகப்பா பல்கலை.யின் எம்.காம் கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப் ஆகியவை அதன் மூலப் படிப்புகளான
பி.காம், எம்.காம் ஆகியவற்றுக்கு இணை யானவை அல்ல. இதுதவிர திருச்சி பாரதிதாசன் பல்கலை.யின் எம்.எஸ். தகவலமைப்பு மற்றும் பயன்பாடு (பகுதிநேர) படிப்பா னது எம்.எஸ்சி கணினி அறிவியலுக்கும், ஆகியவை அரசுப் பணிக்கான பி.எஸ்சி இயற் பியல் கல்வித் தகுதிக்கு இணையாக ஏற்கப்படாது.
புதுச்சேரி பல்கலை. உட்பட பல்வேறு உயர்கல்வி நிறுவ னங்கள் புதிதாக அறிமுகம் செய் துள்ள 20 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் அரசுப் பணிக்கு ஏற் றவை எனவும் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.