தமிழர் தலைவர் ஆசிரியர் புதுச்சேரி வருகை குறித்து கழக பொதுச்செயலாளர் உரை
புதுச்சேரி, பிப். 20- புதுச்சேரியில் 9.2.2023 வியாழன் அன்று மாலை 6 மணி அளவில் இராஜா நகர் பெரியார் படிப்பகத்தில் கழக கலந்துரையாடல் கூட்டம் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையில், புதுச்சேரி மாநில தலைவர் சிவ.வீரமணி முன்னிலையில் நடைபெற்றது.
1. புதிய நிருவாகிகள் அறிமுகம்
2. 10.3.2023 ஆசிரியர் புதுச்சேரி வருகை
3. கழக பிரச்சார பணிகள், பிரச்சார திட்டங்கள்
புதுச்சேரி மண்டல திராவிடர் கழக புதிய பொறுப்பாளர்கள்
இரா.சடகோபன் கழக காப்பாளராகவும், மண்டல செயலாளராக வே.அன்பரசனையும், மண்டல செயலாளராக கி.அறிவழகனையும், மண்டல துணைத் தலைவராக மு.குப்பு சாமியையும், மண்டல அமைப் பாளராக இர.இராசு அவர்களையும், புதுச்சேரி விடுதலை வாசகர் வட்டத் தலைவராக மூலைக்குளம் கோ.மு.தமிழ்ச் செல்வனையும் அறிமுகப்படுத்தி, புதிய பொறுப்பாளர்கள் சிறப் பாக செயல்பட வேண்டி கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரி யர் அறிவித்துள்ளதை சுட்டிக் காட்டி அவர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அனைவருக்கும் சால்வைகள் அணிவித்து சிறப்பு செய்யப்பட் டது. கலந்துரையாடல் கூட் டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.10.3.2023 அன்று புதுச் சேரியில் நடைபெற உள்ள சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மண் டல விளக்க பிரச்சார பயண பொதுக்கூட்டத்தை மாநாடு போல் சிறப்பாக நடத்துவது – பிரச்சார பயண பொதுக்கூட்டம் குறித்து சுவர் எழுத்துகள், சுவ ரொட்டிகள் மற்றும் தெருமுனை பிரச்சாரம் செய்வது எனவும்,
2.மாதம் 2 கருத்தரங்கம், தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத்துவது, கழக வளர்ச்சி பணி யில் அனைவரும் ஒருங்கிணைந்து உத்வேகமாக செயல்படுவது என வும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
இறுதியாக அரியாங்குப்பம் கொம்யூன் கழக தலைவர் இரா.ஆதிநாராயணன் நன்றி கூறினார்.
பங்கேற்றோர்
புதுச்சேரி மண்டல கழக செயலாளர் கி.அறிவழகன், புதிய பொறுப்பாளர்கள் வே. அன்பரசன், இர.இராசு, மு.குப்பு சாமி ஆகியோரும், கழக முக்கிய பொறுப்பாளர்கள் லோ.பழனி, தி.இராசா, மு.ஆறுமுகம், செ.இளங்கோவன், பகுத்தறிவாளர் கழக தலைவர் நெ.நடராசன், புதுச்சேரி உள்ளிட்ட தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார், மற்றும் ச.முகேஷ் அமலன், துரை.சிவாஜி, பா.குமரன், இரா.சதாசிவம், களஞ்சியம், வெங்கடேசன், காரை பெரியார் முரசு, எஸ்.கிருஷ்ணசாமி, கி.வ.இராசன், ஆ.சிவராசன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளை கூறினர்.