சென்னை, நவ. 1- தமிழ்நாட்டில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ள சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
விஜயதசமி மற்றும் முக்கியத் தலைவர்களின் பிறந்த தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை முன்னிட்டு அக்.22 மற்றும் அக்.29 ஆகிய 2 நாட்கள் தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் 33 இடங் களில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத் ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம், அக்.22 மற்றும் அக்.29 ஆகிய நாட்களில் 33 இடங்களிலும் அணி வகுப்பு ஊர்வலம் செல்ல காவல்துறையினர் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் கள், காவல்துறை கண்காணிப்பா ளர்கள் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தகுந்த அறி வுறுத்தல்களை வழங்க வேண்டும். சீருடை அணிந்தவர்களை மட்டுமே அணிவகுப்பு ஊர்வலத்தில் அனு மதிக்க வேண்டும்; காவல்துறையின ரின் நிபந்தனைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தீவிரமாக பின்பற்றி அமைதியான முறையில் செல்ல வேண்டும்; காவல்துறையினர் தகுந்த பாது காப்பு வழங்க வேண்டும்; அக்.22-இல் நடக்கும் அணிவகுப்பு ஊர்வலத் தின் வழித்தடத்தை அக்.20ஆ-ம் தேதிக் குள்ளாகவும், அக்.29-க்கான வழித் தடத்தை அக்.24-ஆம் தேதிக் குள்ளா கவும் காவல் துறையினரிடம் கொடுத்து அனுமதி பெற வேண் டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “விழாக் காலங்கள் மற்றும் தேவர் ஜெயந்தி உள்ளிட்ட நிகழ்ச் சிகள் தமிழ்நாடு முழுவதும் நடை பெறுகிறது. இந்த நேரத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற் படாமல் இருக்க வேண்டும் என்ப தற்காகவே, ஆர்.எஸ்.எஸ். ஊர்வ லத்துக்கு அனுமதி மறுக்கப் பட்டது. இதை சென்னை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வில்லை. மேலும், காவல் துறையின் உளவுப் பிரிவு தகவலின் அடிப் படையிலும் ஆர்.எஸ்.எஸ். பேர ணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேற்கு வங்கம், அரியானா மாநி லங்களில் அண்மையில் நடை பெற்ற பேரணிகளின்போது, மோதல் உருவாகி பல்வேறு சட் டம் – ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டது.
எனவே, இவற்றை கருத்தில் கொண்டும் உளவுத் துறை அளிக்க தகவலின் அடிப்படையிலும்தான் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு காவல்துறையினர் அனுமதி வழங் கவில்லை. ஆனால், இதை கருத்தில் கொள்ளாமல், உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஊர் வலத்துக்கு அனுமதி வழங்க வேண் டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுப்படி அனுமதி வழங்கினால்,அது சட்டம் – ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும். எனவே, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கிய உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண் டும்” என்று மனுவில் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இந்த மனு நவம்பர் 3-ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.