« சமூகநீதிக்கான பெரும் பயணத்தின் போது, எந்த ஊரிலும் வேறு எந்த நிகழ்ச்சிகளையும் இடையில் நுழைத்து ஏற்பாடு செய்யக் கூடாது. அவ்வப்பொழுது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தலைவருக்குப் பெரிதும் சிரமத்தை ஏற்படுத்துவதை அறிகிறோம்.
«ஏற்கெனவே திட்டமிட்டபடி மட்டுமே சுற்றுப் பயண நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
«சுற்றுப் பயண காலங்களிலும் ‘விடுதலை’ ஆசிரியர் பணி, கழகப் பணிகள் அங்கும் ஆசிரியருக்கு உண்டு என்பதால், அனுமதியில்லாமல் கொடி யேற்றுவது முதற்கொண்டு தனித் தனியே ஏற்பாடுகள் எதுவும் கூடுதலாகச் சேர்க்கப்படவே கூடாது.
«கூட்டத்தின் மொத்த அளவு: 2 மணி 30 நிமிடங்கள்.
«வரவேற்புரை, தலைமை, தோழமைக் கட்சித் தலைவர்கள் உரை அனைத்தும் – 1 மணி 15 நிமிடங்கள்
«அறிவிக்கப்பட்ட கழகச் சொற்பொழிவாளர்கள் – 30 நிமிடங்கள்
«தமிழர் தலைவர் உரை – 30 – 35 நிமிடங்கள்
«இணைப்புரை, நன்றியுரை, மேடை ஒருங்கிணைப்பு – 5 நிமிடங்கள்
«முதல் கூட்டம் 5 மணிக்கும், இரண்டாவது கூட்டம் 6:30 மணிக்கும் தொடங்கப் பட வேண்டும். கலை நிகழ்ச்சிகள் இருப்பின் இதற்கு முன்னதாக முடித்துக் கொள்ள வேண்டும்.
«தொடர் பயணம் என்பதால் நேர நெருக்கடியைத் தவிர்க்க, நடுவில் வரவேற்பு என்று நிறுத்துவதையும், ஊர்வலமாக அழைத்துச் செல்வதையும் தவிர்த்து, நேரே கூட்டத்துக்குத் தமிழர் தலைவர் செல்லும்படி திட்டமிட வேண்டும்.
« கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்துக் கட்சித் தோழர்கள், கூட்டத்திற்கு உழைத்த கழகத் தோழர்களுக்குச் சால்வை அணிவித்தல், சிறப்புச் செய்தல் போன்றவற்றை கூட்டத்தின் தலைமையேற்பவர் செய்து கொள்ளலாம்.
«அன்பின் காரணமாக ஆசிரியருக்குச் சால்வை அணிவிப்பதை, காலச் சூழலுக் கேற்ப, சுற்றுப்பயண ஒருங்கிணைப்பாளர்களின் ஆலோசனைப் படி பேச்சுக்கு முன்போ, பின்போ அமைத்துக் கொள்ள வேண்டும்.
«தோழமைக் கட்சித் தோழர்கள் பேசுவதை முன் கூட்டியே நிறைவு செய்து, பிறகு அறிவிக்கப்பட்டுள்ள கழகச் சொற்பொழிவாளரும், அதன் பின் ஆசிரியர் மேடைக்கு வருகை தந்ததும் ஆசிரியர் அவர்களைப் பேசச் செய்வதும் முக்கியம். ஆசிரியர் அவர்களை மேடையில் வைத்துக் கொண்டு அதிக நேரம் பிறர் பேசிக் கொண்டிருந்தால், ஆசிரியர் உரையாற்றும் நேரம் குறையும் என்பதைத் தோழர்கள் உணர்ந்து திட்டமிட வேண்டும்.
– கலி. பூங்குன்றன்
20.2.2023 துணைத் தலைவர், திராவிடர் கழகம்