தஞ்சாவூர், பிப். 20- மேனாள் வணிக வரித்துறை அமைச்சரும், மேனாள் தஞ்சை மாநகர திமுக செயலா ளரும், மாநில திமுக வர்த்தக அணி தலைவருமான எஸ்.என். எம். உபயதுல்லா அவர்கள் 19.2.2023 அன்று உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார், எஸ்.என்.எம்.உபய துல்லா அவர்களின் உடலுக்கு 19.2.2023 அன்று மாலை 6:00 மணியளவில் திராவிடர் கழகத் தின் சார்பில் தஞ்சை மாவட்ட கழக தலைவர் சி.அமர்சிங் தலை மையில், தஞ்சாவூர் ரயில் நிலை யத்தில் இருந்து அவரது இல்லம் வரை திராவிடர் கழக தோழர் கள் அமைதி ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் தஞ்சை மண் டல தலைவர் மு.அய்யனார், மாநில ப.க. துணை தலைவர் கோபு.பழனிவேல், மாநில ப.க. ஊடகப்பிரிவு தலைவர் மா.அழ கிரிசாமி, மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற் றிக்குமார், மாநில கலைத்துறை செயலாளர் சித்தார்த்தன், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் அ.உத்தி ராபதி, தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாவட்ட தொழிலாளரணி தலைவர்
செ. ஏகம்பரம், மாவட்ட தொழி லாளரணி செயலாளர் ச.சந்துரு, மண்டல மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி, மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன் னரசு, மாநகர அமைப்பாளர் செ. தமிழ்செல்வன், தஞ்சை மண்டல இளைஞரணி செயலா ளர் முனைவர் வே.ராஜவேல், மாவட்ட மகளிர் பாசறை அமைப் பாளர் ச. அஞ்சுகம், தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் அரங்கராசன், தெற்கு ஒன்றிய தலைவர் நெல்லுப்பட்டு
அ. இராமலிங்கம், திருவையாறு ஒன்றிய தலைவர் ச. கண்ணன், ஒன்றிய ப.க. அமைப்பாளர் களிமேடு அன்பழகன், நகர துணைசெயலாளர் இரா.வீரக் குமார், மகளிரணி தோழர் பாக் கியம், நகர இளைஞரணி துணை தலைவர் இரா.பெரியர்செல்வம், மற்றும் கழக பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.