உங்கள் பெண்மக்களிடம் 20 வயதிற்குப் பிறகு கேளுங்கள் – திருமணம் செய்து கொள்ள இஷ்டமா? பொதுச்சேவை செய்ய இஷ்டமா? என்று. ‘திருமணத்தில் இஷ்டம்’ என்றால் – நல்ல வரனைத் தேடிப் பிடிக்கும் வேலையை அவர்களுக்கே விட்டு விடுங்கள்; வேண்டுமானால் ஆலோசனை மட்டும் கூறுங்கள். ‘பொதுச் சேவையில் பிரியம்’ என்றால் – அதற்குத் தாராளமாய் வசதி செய்து கொடுங்கள். பிறர் என்ன சொல்லுவார்களோ என்று கவலை கொள்ளாதீர்கள்; பெண் எங்கே கெட்டுப் போய் விடுவாளோ என்று அஞ்சாதீர்கள்!
‘விடுதலை’ 2.11.1948