மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட் டத்தில் ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள மாற்றங்கள் தவறாக வழி நடத்திச் செல்ல இயன்றவையாகவே தோன்றுகிறது
எந்த ஒரு மக்கள் நலத் திட்டத்தின் வெற்றியும் அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள உறுதியிலேயே அடங்கி இருக்கிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் நடைமுறைப்படுத் தப்பட்ட 17 ஆண்டுகளில், கிராமப்புறப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள ஒட்டு மொத்த ஆக்கபூர்வமான பலன்களை பல ஆய்வுகள் உறுதிப் படுத்தி உள்ளன. பருவ காலம் கடந்த வேலை வாய்ப்புகளை அளித்த தன் மூலம், இந்தத் திட்டத்தினால் பயனடையும் மிகுந்த வறுமையில் வாடிய குடிமக்களது வாழ் வாதாரத்துக்கான வருவாய் உயர்த்தப்பட்டு அவர்களது வறுமை; குறைக்கப்பட்டுள்ளது. பருவமழை தவறிய காலங்களில் ஒரு காப்பீடாக இந்த திட்டம் அமைந்ததுடன், இந்த திட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மூலம் ஏற்பட்ட கூடுதல் விவசாயப் பொருள் உற்பத்தி காரணமாக மிகப் பெரிய அளவில் உணவுப் பொருள்கள் பாதுகாப்பும் பெறப்பட்டுள்ளது. இதனால், இந்தத் திட்டம் ஒரு சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு கருவியாக தொடர்ந்து இருந்து வருகிறது. கரோனா நோய்த் தொற்று காலத்தில் இது மேலும் தெளிவாகத் தெரிவதாக இருந்தது. பல மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் அவர்கள் பணி யாற்றி வந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், தங்களது வேலைகளை இழந்து தங்களின் சொந்தக் கிராமங்களுக்குக் குடியேறி, கிராமப்புற விவசாயக் கூலிப்பணிக்கும், கடினமான வேலை களுக்கும் ஆட்களின் தேவை உச்சக்கட்டத்தில் இருந்தபோது, இந்த திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொண்டு, பசி பட்டினி இல்லாமல் வாழ்ந்தனர். சாலைகள், நீர்ப் பாசனப் பணிகளை விட அதிக அளவில் பயன்தரும் அளவில் இந்தத் திட்டம் இது வரை செயல்படுத்தப் படவில்லை. மேலும் மேலும் அதிக பயன் தரும் தி;ட்டங்கள் மேலும் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், ஒன்றிய அரசோ இந்த திட்டத்தை ஒப்புக்கு சப்பாணி என்ற முறையிலேயே கருதி நடத்தி வருகிறது. இந்த திட்டம் அரசின்; மீது நிதிச் சுமையை ஏற்படுத்துவது என்பதாகவே திட்ட நடைமுறை பற்றி பரவலாக கருதப்படுகிறது.
இத்திட்டத்திற்கான 23 ஆவது அய்ந்தாண்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு, அரசின் மொத்த செலவினத்தில் 2.4 சதவிகிதமாக இருந்தது, 24 ஆவது அய்ந்தாண்டு திட்டத்தில் 1.33 சதவி கிதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதுவுமன்றி, அண்மைக் காலங்களில், இப்பணியாளர் களுக்கான ஊதியம் தரப்படுவதில் நீண்ட கால தாமதங்கள் ஏற்பட்டுள்ளன என்பதுடன், நிதி ஒதுக்கீடு அளவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதார் மூலம் ஊதியம் அளிக்கப்படும் நடைமுறையில் லஞ்சம் ஊழல் குறைந்து போய் விடவும்இல்லை: பணியாளர்களுக்கு ஊதியம் அளிப்பதில் ஏற்படும் கால தாமதம் தவிர்க்கப் படவும் இல்லை. திட்டம் நடை முறைப்படுத்தப் படும் காலத்தில் அலுவலர்களுக்கும், பணியாளர் களுக்கும் பலப் பல இடையூறுகள் ஏற்பட்டன. இத்திட்ட செல வினத்தில் 60 சதவிகிதத்தை ஒன்றிய அரசும், 40 சதவிகிதத்தை மாநில அரசுகளும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இந்த சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இப்போது கூறியிருக் கிறார். லஞ்சம் ஊழல் இல்லாமல் இத்திட்டம் செயல் படுத்தப்பட்டால் இது மாநில அரசு களுக்கு பயன்படும் என்று அவர் கூறுகிறார். சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, மாநில அரசுகளின் நிதி ஆதாரம் திரட்டும் எல்லைகள் மிகவும் சுருங்கிப் போயின. கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் மாநிலங்களின் நிதிச் சுமை அதிகமாக ஆகிப்போனது. இத்திட்டத்தின் 40 சதவிகித செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது, பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில் மேலும் மேலும் காலதாமதத்தை ஏற்படுத்தவே செய்யும். மேலும் இந்தத் திட்டம்தேவையின் அடிப்படையில் நடை முறைப்படுத்தப்படுவ தாகும். இத்திட்ட செலவினத்தில் மாநில அரசு களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவற்றின் மீது நிதிச் சுமையை சுமத்தாமல், இதுவரை செய்து வந்தது போல ஒட்டு மொத்த செலவினத்தையும் ஒன்றிய அரசே மேற் கொண்டு, இந்த திட்டத்தை மேலும் சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண் டும். ஏழைகளின் வேலை வாய்ப்பு உரிமையை உறுதி செய்யும் வகையில், இத்திட்டம் பற்றிய தனது கருத்தையும், அணுகு முறையையும் ஒன்றிய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்.
நன்றி: ‘தி இந்து’ 18-02-2023
தமிழில் : த.க.பாலகிருட்டிணன்