கோயிலுக்குச் சென்றபோது படகில் இருந்து கடலில் தவறி விழுந்து 2 பெண்கள் உள்பட மூவர் உயிரிழப்பு
நாகை, பிப்.21- மதுரையில் இருந்து குலதெய்வ வழிப்பாட்டிற்குச் சென்ற வர்கள் தேவிப்பட்டினம் கடலுக்குள் சற்று தொலைவில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற படகு தடுமாறியது. படகில் இருந்து மணிமேகலை (வயது 54), இருளாளி(56) ஆகிய 2 பேரும் தடுமாறி கடலுக்குள் விழுந்தனர். உடனே அவர்களை காப்பாற்ற படகில் இருந்த உறவினரான பொறியாளர் முத்துமாரி(33) என்பவர், கடலில் குதித்தார்.
அவரும் கடலில் மூழ்கினார். சிறிது நேரத்தில் இரண்டு பெண்களின் உடலும் கரை ஒதுங்கியது.
கடலில் மூழ்கிய முத்துமாரியின் உடலும் கண்டெடுக்கப்பட்டது.