தஞ்சை, பிப். 21- பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சமூகப்பணிதுறை, ஜாப்ஸ் பார் டெவெலப்மென்ட் நார்வே மற்றும் அடைக் கலம் சமூக சேவை அறக் கட்டளை சார்பாக சுற்று சூழல் பாதுகாப்பிற்கான பசுமை சமூகப்பணி மற்றும் பசுமை தொழில் முனைவு குறித்த பன்னாட்டு கருத்த ரங்கம் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முனை வர் ஆனந்த் ஜெரார்டு செபஸ்டின் (இயக்குநர் (பொ), பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம்) அனைவ ரையும் வரவேற்று பேசி னார். அவர் பேசுகையில் இந்த கருத்தரங்கின் நோக் கம் குறித்தும், எதிர் காலத் தில் பசுமை சமூகப்பணி மற்றும் பசுமை தொழில் முனைவு மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும் என்றார்.
இதனை தொடர்ந்து பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப (நிகர்நிலைப் பல்கலைக் கழக) துணைவேந்தர் பேரா செ.வேலுசாமி தலைமையு ரையாற்றினார். அவர் தமது உரையில் இன்றைய மாண வர்கள் சமூகம் மற்றும் சுற் றுச்சூழலை பாதிக்காதவாறு செயல்பட வேண்டும் என் றும் சமூகத்திற்கு பயனுள்ள தொழில் முனைவோர்க ளாக மாணவர்கள் வர வேண்டும் என்றார்.
எய்வின்ட் லில்லேசன் (தலைமை நிர்வாக அதிகாரி, நார்வே) பேசுகையில் ஒருங் கிணைந்த கல்வி அணுகு முறை, ஒருங்கிணைந்த பண் ணையம் மற்றும் விலங்குகள் பராமரிப்பு குறித்து விளக் கினார்.
வாய்ஸ் அறக்கட்டளை யின் நிறுவனர் மற்றும் இயக் குநர் கிரிகோரி பேசுகையில்: நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு கடந்த கால இயற்கை வேளாண்முறையை மீட் டெடுத்து வளமான சமூ கத்தை படைக்க வேண்டும் என்றார். மேலும் அவர்கள் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரோடு பணியாற்றிய அனுபவங் களை பகிர்ந்துகொண்டார்.
அதனை தொடர்ந்து திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி யின் தேர்வு கட்டுப்பாட் டாளர் முனைவர் ரெல்டன்: பசுமை சமூகப்பணியில் இருக்கும் சவால்கள் குறித்து அவர் பேசுகையில் பசுமை சமூகப்பணி என்பது சமூக பிரச்சினைகளை நிர்வகிப்ப தற்கான ஒரு முன் உதாரண மாக இருக்கும் என்றும் இதன் மூலம் சுற்றுச்சூழ லுக்கு எதிரான அநீதிகளை களைந்து நிலையான சமூக வளர்ச்சியை கொண்டுவர வேண்டும், தான் நேரடியாக சென்று வனங்களில் உள்ள பல்லுயிர்கள், விலங்குகள், பறவையினங்கள், பூச்சியி னங்கள் குறித்து எடுக்கப் பட்ட ஆவண ஒளிப்படங் களை திரையிட்டு அதன் முக் கியத்துவத்தை விளக்கினார்.
அதன் பின்னர் மலாவி நாட்டை சேர்ந்த ஆல்பஸ் பண்டா (நிறுவனர் மற்றும் இயக்குநர் அக்ரிமார்க் மற் று ம் ஏபி அசோசியேட்ஸ்) பேசுகையில்: நாம் விளை விக்கும் பொருட்களுக்கு மதிப்பு கூட்டுவதன் மூலம் பொருளாதாரத்தை பெருக்கி வளமான வாழ்வை உருவாக்கலாம் என்றார்.
மேலும் ழிணிசிசிளிஷிஷி நிறு வனத்தின் நிர்வாக இயக்கு நர் மதியாஸ் ஜேம்ஸ் அவர் கள் உலகளாவிய சமூக தொழில் முனைவு குறித்த பல்வேறு தரவுகளை விளக் கினார். இதில் சமூகப்பணித் துறை தலைவர் முனைவர் பரமேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சி யில் கனடா, மலாவி, நார்வே மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து 25 நிறுவ னங்களில் உள்ள 100 க்கும் மேற்பட்ட சமூகப்பணி மாணவர்கள், தொண்டு நிறுவன அமைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேர டியாகவும் இணையதளம் மூலமாகவும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிறைவாக நிகழ்ச்சி ஒருங் கிணைப்பாளர் மற்றும் சமூ கப்பணித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஞானராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.