மருத்துவர்கள் இரா. சிவராமன்-பி.வைசாலினி மணவிழாவை நடத்தி வைத்து தமிழர் தலைவர் வாழ்த்துரை!
தருமபுரி, பிப். 21- தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் வேப்பம்பட்டி தி.மு.க. மாநில ஆதிதிராவிடர் நலக் குழு துணை செயலாளர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அரூர் இராஜேந்திரன்-மாலதி இணையரின் மகன் மருத்துவர் சிவராமன், திருப்பத்தூர் மாவட்டம் வடவாளம் காளத்தியூர் பிரபாகரன் மஞ்சுளா தேவி இணையரின் மகள் மருத்துவர் வைசாலினி ஆகியோரது மணவிழா 19.2.2023 அன்று காலை 11 மணியளவில் அரூர் என்.என். மகாலில் நடைபெற்றது.
மணவிழாவில் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி.செழியன், பேரூராட்சி மன்ற தலைவர் சூரிய தனபால், திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் கீரை. விஸ்வநாதன், திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி, அரூர் தொழிலதிபர் முத்து ராமசாமி, திமுக தலைமைக் கழக சொற்பொழிவாளர் கிருஷ்ண மூர்த்தி, திமுக பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் பரமேஸ்குமார், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் துரைசாமி, முனைவர் சிந்தை மு.இரா ஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் அரூர் பேரூராட்சி மன்ற தலைவர் இந்திராணி, பாப்பி ரெட்டிப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் செங்கல் மாரி, திமுக நகர செயலாளர் முல்லை ரவி, திராவிடர் கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், மாநில அமைப் பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், தர்மபுரி மாவட்ட தலைவர் வீ.சிவாஜி, மாவட்ட செயலாளர் தமிழ் பிரபா கரன், மண்டல தலைவர் தமிழ்ச்செல் வன், மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே. கே. சி. எழில ரசன், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் அறிவரசன், செயலாளர் மாணிக்கம், மண்டல செயலாளர் பிரபு, திருப் பத்தூர் மாவட்ட செயலாளர் கலை வாணன் உட்பட கழக பொறுப் பாளர்கள் கலந்து கொண்டனர்.
இணையேற்பு விழாவை தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உறுதி மொழி கூறி நடத்தி வைத்து பேசிய தாவது. தோழர் ராஜேந்திரன்-மாலதி இல்ல மணவிழா என்று சொன்னால் இது எங்கள் குடும்பவிழா, நமது குடும்ப விழாவாகும். இங்கே மணமக னும் மணமகளும் ‘டாக்டராக’ படித் துள்ளார்கள் என்று பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. பெண்கள் படிக் கக்கூடாது, அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று சொன்னார்கள், கீழ் ஜாதிக்காரர்களுக்கு படிப்பு வராது என்று சொன்னார்கள் அதை எல்லாம் மாற்றி அமைத்தவர் தந்தை பெரியார்.
அரூரையும் முத்துவையும் பிரிக்க முடியாது. அரூர் முத்து அவர்களின் திருமணத்தை தந்தை பெரியார் ராகு காலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தி வைத்தார்கள். இன்றைக்கு அவர்கள் தொழிலதிபர்களாக வளர்ந்திருக் கிறார்கள், பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் யாரும் கெட் டுப் போகவில்லை என்பதற்கு ஒரு உதா ரணமாகும். இராஜேந்திரன் இல்ல மணவிழா மாநாடு போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இராஜேந்திரனுக்கு நாடு பூராவும் உறவு உள்ளது.அமெ ரிக்கா,ஜெர்மனி என்று எங்களோடு பயணித்துள்ளார். உலக அளவில் இராஜேந்திரன் பரவியுள்ளார். இராஜேந்திரன் பணியை சுமையாக பார்க்காமல் சுகமாக தாங்கிக் கொள் பவர் மாலதி ஆகும். திராவிட மாடல் ஆட்சிக்கு மணமக்களே சான்றாகும். மணமக்கள் மருத்துவர்களாக ஆங்கில மும், தமிழும், அதனுடன் சித்த மருத் துவமும் சேர்த்து படித்திருக்கிறார்கள்.
எங்கள் பிள்ளைகள் ஆற்றல் திற மையுள்ளவர்கள்.இராஜேந்திரனை பொறுத்தவரை சென்னை என்று எங்காவது சுற்றி வருவார். ஆனால் தொழிலை மாலதி பார்த்துக் கொள் வார். மருத்துவர்கள் சிவராமன்-வைசாலி மணவிழாவை நடத்தி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நான் அரூருக்கு புதியவன் அல்ல, 15 வயதிலிருந்து அரூருக்கு வந்திருக்கிறேன். தமிழ்நாட்டிலேயே தந்தை பெரியார் பெயரில் முதன் முதலில் பூங்கா அமைந்த இடம் அரூராகும். நமது பிள் ளைகளுக்கு அறிவுரை சொல்வதற்கு இல்லை அவர்களைக் கேட்டுக் கொள் வதெல்லாம் மணமக்கள் சிக்கனமாக வும் சுயமரியாதையோடும் வாழ வேண் டும், இல்லறம் மட்டும் என்று இல்லா மல் தொண்டறத்துடன் சேர்ந்து வாழ வும், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போனதில்லை கெட்டுப் போனவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை என்று சொல்லுவார்கள் அதற்கேற்றவாறு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழவும், எளிமையாகவும் சிக்கனமா கவும் இருந்து வாழவும்.நாம் வாழ்வது நமக்காக மட்டுமல்லாமல் சமூகத்திற்கா கவும் என்று வாழவும் கேட்டுக்கொள்கி றேன் என்று வாழ்த்தினார்.
மணவிழாவையொட்டி அரூர் நக ரில் சேலம் சாலையிலிருந்து ஊத்தங் கரை சாலை வரை கழகக் கொடிகளும் பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு தமிழர் தலைவர் ஆசிரியருக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. திருமணம் முதல் நாளில் தமிழ் நாடெங் கும் இருந்து திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்களும், மாவட்ட பொறுப் பாளர்களும் என கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர். மணமக்களின் பெற்றோர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். அதே போல பெற்றோர்களும் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.
மணவிழா மாநாடு போல் சிறப்பாக நடைபெற்று இருந்தாலும் எந்த மதச் சடங்கும் இன்றி எளிமையாக நடை பெற்றது.