பெரியார் மருந்தியல் கல்லூரியில் மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது

1 Min Read

தமிழ்நாடு, மற்றவை

திருச்சி, பிப். 22-  திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய குடற் புழு நீக்க நாளான 15.2.2023 அன்று திருச்சி சுப்ரமணியபுரம் ஆரம்ப சுகாதார மய்யத்தின் மூலம் மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது. 

முன்னதாக மருத்து வர் நிவேதா குடற்புழு நீக்கத்தின் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் மாணவர்களிடையே எடுத்துரைத்தார். பெரியார் மருந்தியல் கல் லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை குடற்புழு நீக்க ஆல்பென்டசோல் மாத்திரைகளை மாணவர்களுக்கு வழங்கி  உட்கொள்ளும் முறைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் உரையாற்றினார். 

இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி, சுகா தார மய்யத்தின் நகர்ப்புற சுகாதார செவிலியர் ஜான்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா.அ.ஜெயலெட்சுமி, பெரியார் நலவாழ்வு சங்கத்தின் செயலர் பேரா.க.அ.ஷ. முகமது ஷபீஃக் மற்றும் இணைச் செயலர் அ. ஷமீம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியின் மூலம் 415 மாணவர்கள் மாத்திரைகள் உட்கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *