நவம்பர் 4இல் கோவை பெரியார் அறிவுலகம் பாராட்டு விழா அரூர் மாவட்ட கழகம் சார்பில் தோழர்கள் பங்கேற்க முடிவு!

3 Min Read
- Advertisement -

பாப்பிரெட்டிப்பட்டி, நவ.2- அரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 1.11.2026 அன்று மாலை 4 மணி அளவில் பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் மன்றத்தில் மாவட்ட கழகக் தலைவர் அ.தமிழ்ச்செல்வன் தலைமையில் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

வருகை தந்த அனைவரையும் வரவேற்று மாவட்ட கழகச் செயலாளர் கு.தங்கராஜ் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை பற்றி எடுத்துரைத்தார். மாவட்டக் கலைத்துறைத் தலைவர் கீரை. பிரபாகரன், மாவட்டத் தொழிலாளர் அணி தலைவர் சிலம்பரசன், கழகச் சொற்பொழிவாளர் த.மு. யாழ்திலீபன், மொரப்பூர் ஒன்றியச் செயலாளர் வித்தியாகர், கடத்தூர் ஒன்றிய செயலாளர் பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை ஏற்று கருத்துரையாற்றினர்.

மாநிலக் கலைத்துறைச் செயலாளர் மாரி. கருணாநிதி தொடக்க உரையாற்றினார். கலந்துரையாடல் கூட்டத்தின் முடிவுகளை செயல்படுத்துவது குறித்து திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன் சிறப்புரையாற்றினார்.

ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட திராவிடர் கழகச் செயலாளராகவும், கிருஷ்ணகிரி மாவட்ட கழகத் தலைவர் செயலாளராக பணியாற்றிய பையூர் பெ.மதிமணியனின் வாழ்விணையர் தமிழ்ச்செல்வி யின் மறைவிற்கு அரூர் மாவட்ட திராவிடர் கழகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வீரவணக்கம் செலுத்துகிறது.

பல்வேறுச் சிறப்புகளை உள்ளடக்கி வாழும் வரலாறாக கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் என்னும் நினைவு அரங்கத்தை கட்டி அமைத்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் மேனாள் முதல மைச்சருமான மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் கோவையில் நவம்பர் 4ஆம் தேதி நடைபெறும் பாராட்டு விழாவில் அரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 25க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப் படுகிறது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்த நாளை கிராமங்கள் தோறும் இனிப்பு வழங்கி கொண்டாடுவதுடன், தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாளான டிசம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் 100 விடுதலை சந்தாவை சேர்த்து அளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

அரூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகச் செயலாளராக பணியாற்றிய தீ. சிவாஜி பணி நிமித்தமாக செயல்பட முடியாத நிலையில் உள்ளதால் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்த நிலையில், கழக மாநில பகுத்தறி வாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வனின் அனுமதியோடு பொம்மிடி கோகுலை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளராகவும், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவராக தீ.சிவாஜியும் நியமிக்கப்பட்டு கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமனால் முன்மொழிந்து அறிவிக்கப்படுகிறது.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டும், தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு மொரப்பூர் ஒன்றியச் செயலாளர் வித்தியாகர் தலைமையில் மொரப்பூரில் பரப்புரை கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்படுகிறது.

அரூர் பகுதி கட்டரசம்பட்டி, பாளையம், வீரப்ப நாயக்கன்பட்டி தோழர்களை இணைத்து தீர்த்தமலையில் டிசம்பர் மாதம் தெருமுனைக் கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

நிகழ்வின் இறுதியாக மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செய லாளர் மாரி. கருணாநிதியின் 50ஆம் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழகத்தின் சார்பில் கழகத் தோழர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

இறுதியாக மொரப்பூர் ஒன்றியச் செயலாளர் வித்யாகர் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *